மின்சார சபையின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம்
வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணிநேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மின் துண்டிக்கப்படுவதாக பிரதேசவாழ் மக்கள் கவலை வெளியிட்டள்ளனர் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உட்பட கிராம மக்கள் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் தெரிவித்தனர். மின்சார சபையின் இச்செயற்பாட்டினால் […]


