யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் ‘சாந்தன் துயிலாலயம்’ அங்குரார்ப்பணம்
எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் ‘சாந்தன் துயிலாலயம்’ சாந்தனின் தாயாரால் இன்று காலை 9 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் சாந்தனின் புகழுடல் புதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் ‘சாந்தன் துயிலாலயம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான சாந்தன், குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கடந்த […]
