முக்கிய செய்திகள்

யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கிய ஒருவர் பலி மற்றொருவர் காயம்

  • February 3, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் முதலைக்குடாவில் வசிக்கும் 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் கிராம உத்தியோகத்தரால் கடந்த மார்கழி மாதப் […]

உலகம் முக்கிய செய்திகள்

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் எபோலா தொற்று

  • February 1, 2025
  • 0 Comments

ஆப்பிரிக்க நாட்டின் எபோலா ஆற்றங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 1976-ம் ஆண்டு எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 2014 முதல் 2016-ம் ஆண்டில் எபோலா தொற்றால் சுமார் 11 ஆயிரம் பேர் இறந்தனர். பின்னர் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு […]

முக்கிய செய்திகள்

கிழக்கு பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது

  • January 30, 2025
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (30) திருகோணமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 2024 போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதிலிருந்து 1000 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது நேர்முகப் பரீட்சையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கே ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள மொழிமூலம் 34 பேரும் தமிழ் மொழிமூலம் 61பேரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் 94 பேரும், […]

முக்கிய செய்திகள்

கனடாவின் பிரதமாராக்குங்கள் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துகின்றேன்- கனேடிய கொன்சவேட்டிவ் கட்சி தலைவர் பியெர் பொய்லிவ்

  • January 30, 2025
  • 0 Comments

கனடாவில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நடைப்பபெற்ற குற்றங்களுக்காக அதனை சர்வதேச நீதிமன்றத்தலி நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடாவின் டொரன்டோ நகரில் ‘ஹார்வெஸ்ட் ஒஃப் ஹோப்’ எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் இவ்வாறு கனேடிய தமிழ் சமூகத்திடம் உறுதியளித்துள்ளார் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை […]

முக்கிய செய்திகள்

இலங்கையும் அமெரிக்காவும் ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகள் என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்

  • January 30, 2025
  • 0 Comments

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு என்பவற்றை ஊக்குவிக்கும் திறந்த அரசுப் பங்குடமை போன்ற திட்டங்கள் மூலம் ஆழமான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஸானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்குத் […]

உலகம்

அமெரிக்கர்களின் வருமான வரியை ரத்து செய்ய டிரம்ப் திட்டமிட்டுள்ளார்

  • January 29, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றுக்கொண்டதில் இருந்து பல தடாலடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கான வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் தன்னிடம் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வருமான வரிக்கு பதிலாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்த போவதாகவும் இதன் மூலம் அமெரிக்க மக்களைப் பணக்காரர்களாக ஆக்க முடியும் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் பெடரல் அரசும் மாகாண அரசும் தனித்தனியாக […]

முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்களின் ஆக்ரோஷமான செயற்பாடுகளாலேயே துப்பாக்கி இயங்கியது – கடற்படை விளக்கம்

  • January 28, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்கள் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாலேயே துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக கடற்படை விளக்கமளித்துள்ளது இந்திய மீனவர்களை கைது செய்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்த போது, கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நேற்று (27ஸ்ரீ01-2025) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்துக்கு அப்பால் இலங்கைக்கு உரித்தான கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தனர் எனவே இந்திய மீன்பிடிப்படகுகளை […]

உலகம்

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

  • January 27, 2025
  • 0 Comments

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் பிப்ரவரி 18, 2025 வரை தொடர்ந்து அமலில் இருக்கும்’ என்று வெள்ளை மாளிகை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் […]

இந்தியா

தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக ஆளுநர் சித்தரித்ததற்கு தமிழக அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது

  • January 26, 2025
  • 0 Comments

குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்க குடியரசு தினத்தை அரசியல் கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்தில் கவர்னரின் செயல்பாடு, அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை, கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு என தனக்கு எதிராக செய்திகள் வந்து […]

முக்கிய செய்திகள்

அரசாங்கம் அலாக்காக அடித்தது பெல்டி அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை- அரசாங்கம்

  • January 25, 2025
  • 0 Comments

மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக அமைச்சரவை முடிவெடுக்கவிலலையென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஆதானி காற்றாலை திட்டத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டணங்களை மட்டுமே மறு ஆய்வு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார் ஆதானி திட்டம் தொடர்பாக தற்போது நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்தும் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார். […]