முக்கிய செய்திகள்

அமெரிக்க நீதிமன்றம் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்தது

  • January 25, 2025
  • 0 Comments

அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார் இந்த உத்தரவு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ம் திகதி முதல் அமலுக்கு வரும் என்பதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அறுவை சிகிச்சை வழியாக […]

இந்தியா

சீமானுக்கு எதிராக போராடிவர்களில் 878 பேர் மீது வழக்குப் பதிவு

  • January 23, 2025
  • 0 Comments

தந்தை பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஸ்ணன் தெரிவித்து இருந்தார். இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே அறிவித்தப்படி சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். மேலும், சீமான் உருவப்படத்தை […]

முக்கிய செய்திகள்

அனுர புத்தாவுக்கு ‘நான் மகிந்த ராஜபக்ச என்பது மறந்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த தடார் அடி அடித்துள்ளார்

  • January 21, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார் அனுரகுமார திசநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்கட்சி அரசியல்வாதி போலநடந்துகொள்கின்றார் என மகிந்த ராஜபக்ச விமர்சித்துள்ளார் நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், அவரது பேச்சுக்கள் அரசியல் மேடைகளிற்கும் தேர்தல் காலத்தில் அவர் போலி வாக்குறுதிகளை வழங்கியதை […]

முக்கிய செய்திகள்

யாழில் தமிழ்மொழி 3வது இடத்தில் இருப்பதால் அதிர்ச்சியுற்றேன் – அமைச்சர் சந்திரசேகரன்

  • January 20, 2025
  • 0 Comments

யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசாரம் மையம் […]

உலகம்

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட 3 பிணைக்கைதிகளும் இஸ்ரேல் திரும்பினர்

  • January 20, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதங்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு (42 நாட்கள்) நடைமுறையில் இருக்கும். கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச்சென்றனர். பின்னர் தற்காலிகமாக போர் நிறுத்தத்தின்போது […]

இந்தியா

நடிகர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் காந்தி மீது வைக்குமாறு அண்ணாமலை தெரிவிப்பு

  • January 19, 2025
  • 0 Comments

மதுரையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: த.வெ.க. தலைவர் விஜய்யை சமீபத்தில்திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார். தற்போது செல்வப்பெருந்தகை இந்தியா கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை. பா.ஜ.க. யாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. திமுக பிறக்கும் முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் […]

இந்தியா

மோட்டார் பைக்கில் ஓடியப்படியே காதலியுடன் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த இளம்ஜோடி

  • January 18, 2025
  • 0 Comments

‘ரீல்ஸ்’ மோகத்தால் இளைஞர்களும், இளம்பெண்களும் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கான்பூர் நகரை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று பைக்கில் செல்லும் போது ரீல்ஸ் வீடியோ எடுத்த காட்சிகள் இணையத்தில் பரவின. அதில், வாலிபர் தனது காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் உள்ளது. மேலும் அந்த வாலிபர் காதலியை பைக்கில் அமர வைத்தவாறே ஓட்டி செல்கிறார். இருவரும் ஹெல்மெட்டும் அணியவில்லை. மாறாக ஒரு பாடலுக்கு […]

உலகம்

கனடாவில் தேர்தல்களத்திலிருந்து இருந்து முக்கிய வேட்பாளர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர்

  • January 18, 2025
  • 0 Comments

கனேடா பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் அதனை தொடர்ந்து புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்ட்டுள்ளது இந்நிலையில் தேர்தலில் இருந்து சில முக்கிய வேட்பாளர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர். கிறிஸ்டியா ஃப்ரீ லேண்ட், கரீனா கோல்ட் மற்றும் மார்கெனரி ஆகியோர் கட்சி தலைமை பொறுப்பிற்கு போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்ற போதிலும் உத்தியோகப்பூர்வமாக அவர்கள் இன்னமும் அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே சில சிரேஸ்ட அமைச்சர்கள் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு என எதிர்வுகூறப்பட்டுள்ளது

  • January 18, 2025
  • 0 Comments

இன்று தொடக்கம் அதாவது (18-01-2025) ஆம் தேதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும், குறிப்பாக கிழக்கு, வட-மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும், கிழக்கு தாழ்வு பகுதிகளிலும் இன்னும் தீவிரமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் . மேலும், அடுத்த சில நாட்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும். அனைவரும் இதில் கவனம் செலுத்துமாறு நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை நீர்ப்பாசன இயக்குநரகம் சூரியபண்டார வேண்டகோள் […]

முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர்.

  • January 17, 2025
  • 0 Comments

ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர். ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ உள்ளிட்ட குழுவினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. ஈழத்தமிழர்களின் அரசியல் […]