முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ஸவுக்கும்; அமெரிக்க தூதுவருக்குமிடையில் சந்திப்பொன்று இன்று இடம் பெற்றது

  • February 14, 2025
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்துக்கு சென்று கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி. ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

அதானிகுழுமத்துடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகின்றதா?

  • February 14, 2025
  • 0 Comments

காற்றாலை மின்திட்டம் குறித்து இந்தியாவின் அதானிகுழுமமும் இலங்கை அரசாங்கமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் காற்றாலை மின் திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து விலகிக்கொள்வதாக அதானி குழுமம் உத்தியோகபூர்வமாகஅறிவித்துள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கமும் அதானிகுழுமமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளன இதன் மூலம் காற்றாலை மின் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் முற்றாக பூர்த்தியாகவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. இருதரப்பும் அடுத்தவாரம் மூடியகதவுகளிற்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணக்கப்பாட்டிற்கு வரமுடியுமா என […]

முக்கிய செய்திகள்

வெளிப்படைத்தன்மையுடைய அனைவருக்கும் சமமான வரி கொள்கை இலங்கையில் இல்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது

  • February 14, 2025
  • 0 Comments

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு மனித வளத்தை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுக்குழுவினர் கடந்த புதன்கிழமை (12-02-2025) தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணாந்துவை தொழில்அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாட்டின் மனிதவள மேம்பாட்டு செயல்முறைக்கு திறம்பட பங்களிக்க […]

இந்தியா

காவல் உதவி செயலியை பெண்கள் பயன்படுத்த வேண்டுமென ஆவடி போலீஸ் கமிசனர் சங்கர் வேண்டுகோள்

  • February 13, 2025
  • 0 Comments

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பூந்தமல்லி பஸ்நிலையத்தில் காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து மாணவிகள் பெண்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில் ஆவடி போலீஸ் கமிசனர் சங்கர் கலந்து கொண்டு பெண்களிடையே காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு […]

முக்கிய செய்திகள்

காற்றாலை மின்திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது

  • February 13, 2025
  • 0 Comments

இலங்கையில் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த காற்றலை மின்திட்டத்திலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி குழுமம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மீள்சக்தி காற்றாலை திட்டம் உட்பட இலங்கையில் முன்னெடுக்கவிருந்த திட்டங்களில் மேலும் ஈடுபடுவதிலிருந்து விலகும் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தை அதானி கிறீன் எனேர்ஜி கௌரவமான விதத்தில் அறிவித்துள்ளது. அதானி குழுமம் நாங்கள் இலங்கை குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம், இலங்கை அரசாங்கம் விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்புகளிற்கு தயாராக உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது  

உலகம் முக்கிய செய்திகள்

சுனிதா வில்லியம்சை மீட்க டிரம்ப நடவடிக்கை.

  • February 13, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, […]

உலகம் முக்கிய செய்திகள்

ரஸ்சிய ஜனாதிபதியும் அமெரிக்க ஜனாதிபதியும் போனில் பேச்சுவார்த்தை, உக்ரைன் போர் முடிவுக்கு வருகின்றதா?

  • February 13, 2025
  • 0 Comments

ரஸ்சியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், ரஸ்சிய ஜனாதிபதி புதினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அமெரிக்கா- ரஸ்சிய சிறைக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசினர். இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது: ரஸ்சிய ஜனாதிபதி ; புதினுடன் சற்று முன் […]

உலகம்

சீனாவின் சரக்கு கப்பல் ரஸ்சியாவில் கரை ஒதுங்கியுள்ளது

  • February 12, 2025
  • 0 Comments

ரஸ்சியாவின் சகலின் நெவெல்ஸ்கி கடற்கரை அருகே சீன சரக்கு கப்பல் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறும் அபாயம் இருப்பதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஸ்சியாவின் பால்டிக் கடற்பகுதியில் அன் யாங்-2 என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. சீனாவுக்குச் சொந்தமான அந்த கப்பலில் சுமார் 1 லட்சம் டொன் எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்றவை கொண்டு செல்லப்பட்டன. சகலின் நெவெல்ஸ்கி நகரில் உள்ள உஸ்ட்-லுகா துறைமுகம் அருகே சென்றபோது அந்த […]

இந்தியா

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்- மம்தா

  • February 11, 2025
  • 0 Comments

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் பேசும்போது, ‘டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. அரியானாவில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. வென்று விட்டது. எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் இல்லை. […]

இந்தியா

பெங்களூருவில் இன்று சர்வதேச விமான கண்காட்சி ஆரம்பமாகின்றது

  • February 10, 2025
  • 0 Comments

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு ஹெலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற இருக்கிறது. 10-ம் தேதி தொடங்கும் விமான கண்காட்சி 14-ம் தேதி வரை என 5 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெற உள்ளது. விமான கண்காட்சி நடைபெறும் […]