இந்தியா

இஸ்ரோவின் 100-வது ரொக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது

  • January 29, 2025
  • 0 Comments

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 100-வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ரொக்கெட் வானை கிழித்துக் கொண்டு புறப்பட்டது. இந்த ரொக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.53 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த ரொக்கெட் சுமந்து செல்லும் […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு அடங்கலாக 7 மாவட்டங்களில் காற்றின் தரம் பாதிப்பு

  • January 28, 2025
  • 0 Comments

இலங்கையில் காற்றின் தரக் குறியீடு இன்று முழுவதும் 58 முதல் 120 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு சற்று ஆரோக்கியமற்ற நிலை வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அதே நேரத்தில் பிற பகுதிகளில் மிதமான மட்டத்தில் இருக்கும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்களின் ஆக்ரோஷமான செயற்பாடுகளாலேயே துப்பாக்கி இயங்கியது – கடற்படை விளக்கம்

  • January 28, 2025
  • 0 Comments

இந்திய மீனவர்கள் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாலேயே துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக கடற்படை விளக்கமளித்துள்ளது இந்திய மீனவர்களை கைது செய்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்த போது, கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நேற்று (27ஸ்ரீ01-2025) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்துக்கு அப்பால் இலங்கைக்கு உரித்தான கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தனர் எனவே இந்திய மீன்பிடிப்படகுகளை […]

இந்தியா

தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக ஆளுநர் சித்தரித்ததற்கு தமிழக அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது

  • January 26, 2025
  • 0 Comments

குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்க குடியரசு தினத்தை அரசியல் கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்தில் கவர்னரின் செயல்பாடு, அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை, கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு என தனக்கு எதிராக செய்திகள் வந்து […]

இந்தியா

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது – இலங்கை கடற்படை அராஜகம்

  • January 26, 2025
  • 0 Comments

தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். தனுஸ்கோடி மற்றும் தலைமன்னார் கடற்ப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்தது. அத்துடன் மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.  

முக்கிய செய்திகள்

இராஜபக்ஸக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்தால் நாங்கள் அச்சமடைய போவதில்லையென நாமல் தெரிவித்துள்ளார்

  • January 26, 2025
  • 0 Comments

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபகஸ தெரிவித்தார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமது சகோதரரான யோசித்த ராஜபக்ஸவை நேற்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேலுள்ளவாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எனது தம்பியை தங்காலையில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பாக அழைத்து […]

இந்தியா

கெஜ்ரிவாலின் உயிருடன் விளையாடுகிறீர்களா?: என அமித்ஸா மற்றும் மோடியிடம் கேள்வியெழுப்பியுள்ள அதிஸி

  • January 24, 2025
  • 0 Comments

டெல்லி சட்டசபை தேர்தல் திர்வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல் அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார். கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில போலீசார் வழங்கும் பாதுகாப்பை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி போலீசார் முறைப்பாடு செய்துள்ளனர் இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பஞ்சாப் மாநில போலீஸ் திரும்பப் பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு […]

முக்கிய செய்திகள்

அனுர புத்தாவுக்கு ‘நான் மகிந்த ராஜபக்ச என்பது மறந்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த தடார் அடி அடித்துள்ளார்

  • January 21, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார் அனுரகுமார திசநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்கட்சி அரசியல்வாதி போலநடந்துகொள்கின்றார் என மகிந்த ராஜபக்ச விமர்சித்துள்ளார் நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், அவரது பேச்சுக்கள் அரசியல் மேடைகளிற்கும் தேர்தல் காலத்தில் அவர் போலி வாக்குறுதிகளை வழங்கியதை […]

சினிமா

விருது வென்றார் நடிகை தேவயானி

  • January 21, 2025
  • 0 Comments

நடிகை தேவயானி இதுவரை 100 திரைப்படத்திற்கும் மேல் நடித்துள்ளார். 90ஸ் களின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இந்நிலையில் நடிகை தேவயானி தற்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படத்தை முதன்முறையாக இயக்கி, எழுதி, தயாரித்துள்ளார் தேவயானி. இந்த குறும்படம் 17-வது ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைக்கான குறும்படம் என்ற விருதை வென்றுள்ளது. இப்படத்திற்கு இசையை இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பி.லெனின் செய்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ராஜன் மிர்யாலா மற்றும் ஒலி […]

முக்கிய செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தலில் பல இடங்களில் அரச கட்சி தோல்வி

  • January 21, 2025
  • 0 Comments

பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது இதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது. தோல்வியை தடுப்பதற்கே அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஹோமாகம, கொரட்டுவ, களனி,போருவளை […]