உலகம்

காஸாவுடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணக்கம்

  • January 17, 2025
  • 0 Comments

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் காஸாவில் 2023இல் ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது. இந்தப் போரால் 46,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு காஸாவின் மக்கள்தொகையில் 90 வீதமான பேர் இடம்பெயர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களைத் தொலைத்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்கு பின் காஸாவில் நடந்த தாக்குதலில் 113 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, கத்தார் நாடுகளின் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நாட்டில் இடம்பெற்றுவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவும்- எதிர்க்கட்சித் தலைவர்

  • January 16, 2025
  • 0 Comments

நாட்டில் இடம்பெற்றுவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நான், ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்துக்கும் மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைப் பிரதானிகளிடமும் தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் என சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில், 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன், கடந்த 16 நாட்களில் மாத்திரம் 05 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருப்பது பாரதூரமான நிலைமை என்பதை […]

உள்ளூர்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்கள் மாயம்!

  • January 15, 2025
  • 0 Comments

கடந்த காலகட்டத்தில் மாகாண சபைகளுக்குச் சொந்தமான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல் போன வாகனங்களில் பல சொகுசு கார்கள் மற்றும் ஜீப் வண்டிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி மாகாண சபைகளின் பல்வேறு அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களே அவ்வப்போது காணாமல் போயுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அந்த வாகனங்கள் குறித்த தகவல்களைக் கண்டறிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

  • January 12, 2025
  • 0 Comments

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கண்டி – தவுலகல மாணவி கடத்தலுக்கான காரணம் வெளியானது!

  • January 12, 2025
  • 0 Comments

கண்டி – தவுலகல பகுதியில் வேனில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (11) நடந்த இந்தக் கடத்தலின் முக்கிய சந்தேகநபர், மாணவியின் தந்தையின் சகோதரிகளில் ஒருவரின் மகன் எனத் தகவல் வெளியாகியுள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனைக்குரிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வலி.வடக்கில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் திருக்குறள் வளாகம்!.

  • January 12, 2025
  • 0 Comments

வலி.வடக்கு மாவிட்டபுரத்தில் மிகப் பிரமாண்டமாக தயாராகின்றது திருக்குறள் வளாகம். 1330 குறள்களையும் என்றும் அழியாத வகையில் கருங்கற்களில் செதுக்கி அதனை நம் சமூகத்திற்கு வழங்கும் அரிய முயற்சியாக இந்த திருக்குறள் வளாகம் அமைந்துள்ளது. திருக்குறள் பற்றி வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து ஆராச்சிகள் மற்றும் ஆய்வுகள் செய்வதற்கு வசதியாக, பிரத்தியேகமாக பல வசதிகள் இந்த அரண்மனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மனதை ஒருநிலைப்படுத்தும் தியானத்தின் மகத்துவத்தை தற்கால நம் சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இங்கு தியான மண்டபம் அமைக்கப்படுகின்றது. […]

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் – ஊடகத்துறை அமைச்சர்

  • January 9, 2025
  • 0 Comments

கடந்த காலங்களில் நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அவைத்தலைவர் காரியாலயத்தில் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

கனடா

கனடிய சுற்றாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

  • December 30, 2024
  • 0 Comments

ரொறன்ரோ மற்றும் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் சிறிதளவு வெள்ளம் ஏற்படக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது 20 முதல் 40 மில்லி மீட்டர் வரையிலான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தாழ்நிலைப்பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. நிலப்பகுதி பனி படலத்தினால் சூழ்ந்து இருப்பதனால் மழைநீர் நிலத்திற்குள் உள்ளிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை என […]

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)27.12.2024

  • December 28, 2024
  • 0 Comments

இந்திய மீனவர்களுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை – அமைச்சர் சந்திரசேகரன்! வெடுக்குநாறி மலையில் ஆதிசிவனை வழிபட வழிசெய்யுங்கள் – ரவிகரன் காணிகளை படையினர் ஆக்கிரமித்திருந்தால் அறியத்தருமாறு காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் கோரிக்கை யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் பாவனை அதிகரித்துள்ளதா? இந்தியாவை அமைதிகாக்குமாறு கஜேந்திரகுமார் எம்பி கோரிக்கை https://youtu.be/x815qcnAbH4

உள்ளூர்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்த உயிர் அச்சுறுத்தலும் இல்லை!

  • December 27, 2024
  • 0 Comments

அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே அண்மையில் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களில் பேசிய அவர், டிசம்பர் 23 […]