இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)26.12.2024
ஆழி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு! கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குழப்பம் சுனாமியால் காவுகொள்ளப்பட்டோருக்கான நினைவேந்தல் – முல்லைதீவு https://youtu.be/XuD2EORwub4
ஆழி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு! கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குழப்பம் சுனாமியால் காவுகொள்ளப்பட்டோருக்கான நினைவேந்தல் – முல்லைதீவு https://youtu.be/XuD2EORwub4
அவர் மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத் காம்ப்ளியின் உடல் நிலை குறித்து அவரது நண்பர் மார்கஸ் கௌடோ தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார். எனினும், அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். காம்ப்ளியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடையும் வரை கிட்டத்தட்ட ஒருமாத காலத்திற்கு அவருக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். வினோத் காம்ப்ளியின் மருத்துவ […]
கிளிநொச்சியில் மதுபான சாலைகளை மூடுமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் யாழ் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்களம் அதிரடி நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் தூக்கிட்டு தற்கொலை ஐநாவுக்கும் சுற்றுலா அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. அரிசி இறக்குமதிக்கு அமைச்சர் அனுமதி https://youtu.be/XUBjvvAVIqA
கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை தோல்வி அடைய செய்ய கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இந்நிலையில், மத்திய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் கூறியதாவது, 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுகிறது. தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதிலும், மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த […]
பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று முன் தினம் புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் ஊழியர்களையும் சந்தித்து அவர் பேசினார். அதன்பின் நேற்று இரவு மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டார். மோடியுடன் உரையாடிய இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ஒரு தொழிலாளி, நீங்கள் மருத்துவ விடுமறை […]
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 27வது ஸ்ரீ சந்திர சேக ரேந்திர சரஸ்வதி தேசிய விருது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. இதில் பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். சுதந்திரத்தை நடுநிலைமையோடு ஒருபோதும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எங்களின் தேசிய நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதைச் செய்வோம். தொடர்ந்து பேசிய அவர், உலகளாவிய அளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகள் மேல் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது. […]
ஒரே நாளில் 46 பேர் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குளிர்காலத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய வாகன டயர்களை பொருத்தாத மேலும் 150 சாரதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கியூபெக் போலீசார் ஒரே நாளில் வீதிகளில் சுமார் 300 சாரதிகளை சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பண்டிகை காலத்தில் கூடுதல் விசாரணைகள் சோதனைகள் நடத்தப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். மது போதையில் வாகனம் செலுத்துவது ஆபத்தானது எனவும் விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் […]
மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடகிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது கிளிநொச்சியில் புதையல் தேடிய சிங்களவர்கள் நோர்வே தூதுவர் பிரதமரை சந்தித்தார் https://youtu.be/WKOY0revRak
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் இகியுடர் மாகாணத்தில் புசிரா ஆறிலேயே இந்த விபத்து நடைப்பெற்றுள்ளது பாய்கிறது. இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்று அண்டை நகருக்கு புசிரா ஆற்றில் படகு ஒன்றில் 150க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊருக்கு அந்தப் படகில் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர். இதில் ஆற்றில் மூழ்கி 38 பேர் பரிதாபமாக […]
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர். தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை