உள்ளூர்

மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன்

  • December 22, 2024
  • 0 Comments

மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ள முடிவில் மாற்றம் செய்யக்கூடாதென்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இராஜினாமா செய்துவிட்டு, இரண்டு மாதங்களின் பின்னர் அதனை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை அனுப்பிவைப்பதனால் அதனை ஏற்க முடியாது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியில் மாவை சோ.சேனாதிராஜா நீடிப்பதை அங்கீகரிப்பதா? இல்லையா? என்பது பற்றித் தீர்மானிக்கும் பொருட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியாவில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கடந்த 14 ஆம் திகதி […]

இந்தியா

சென்னையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி

  • December 22, 2024
  • 0 Comments

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். 1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி […]

இந்தியா

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

  • December 18, 2024
  • 0 Comments

கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு தடைகளை தாண்டி இந்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் ஜாமின் பெற்று சமீபத்தில் விடுதலை ஆனார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். முன்னதாக, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் […]

உலகம்

பிரான்ஸ் மயோட்டா தீவை தாக்கிய புயலால் பலி எண்ணிக்கை ஆயிரங்களை கடக்கலாம்

  • December 16, 2024
  • 0 Comments

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்த புயலால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்த […]

உலகம்

கனடாவில் வரி விடுமுறை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

  • December 16, 2024
  • 0 Comments

கனேடிய மத்திய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய பண்டிகை காலத்தில் மக்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வார இறுதி நாட்கள் தொடக்கம் இந்த வரிச்சலுகை அதாவது வரி விடுவிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிகளுக்கு இந்த வரிசலுகை அமுலில் இருக்கும்என தெரிவிக்கப்படுகின்றது இதன் மூலம் நாட்டில் வரி செலுத்துவோர் சுமார் 1.5 பில்லியன் டொலர்கள் வரையில் சேமிக்க முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி […]

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(15.12.2024 )

  • December 16, 2024
  • 0 Comments

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு  மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் கப்பல் சேவை ஆரம்பம் யாழில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி! மஹிந்தவின் பாதுகாப்பு விலக்கப்பட்டது குமுறுகிறார் -மனோஜ் கமகே  இலங்கையின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்கப்படும் என்கிறார் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் https://youtu.be/2svXrqbsfvc

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)

  • December 6, 2024
  • 0 Comments

    ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல் கிளிநொச்சியில் தாய் தூக்கில் மரணம் 14 வயதுடைய மகன் நிறைவெறியில் கைது மண்டையிலிருந்த கொண்டையை மறந்த சபாநாயகர் அசோகரன்வல வவனியாவில் கொரிய நிறுவனத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு https://fb.watch/wiUTYwy9YW/

உள்ளூர்

நெற்பயிரை காப்பாற்றுமாறு விவசாயிகள் போராட்டம்

  • December 5, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் இன்று வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரியே விவசாயிகள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல் வயல் நிலங்களில் தேங்கி பயிரை அழிவடையச் செய்வதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்  

இந்தியா

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • December 2, 2024
  • 0 Comments

ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் […]

உலகம்

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த தயார்- ஜெலன்ஸ்கி

  • November 30, 2024
  • 0 Comments

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடிக்கின்றது சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷியா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தியது மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய ஜனாதிபதி புதின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ரஷியாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை […]