யாழ் அச்சுவேலியில் கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க முயற்சித்த 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி
யாழ்ப்பாணம் – அச்சுவேலி, தோப்பு பகுதியில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று மாலை (26-06) இடம்பெற்றுள்ளது. பிரதீபன் தச்ஷன் (வயது 10) அரசடி, தோப்பு என்ற முகவரியைக் கொண்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். தனது பேரனுடன் தோட்டத்துக்கு சென்ற சிறுவன், பேரன் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாளியினை கிணற்றில் விட்ட பொழுது கயிற்றில் கால் சிக்குண்டு கிணற்றுக்குள் […]
