உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தொடரும் சிக்கல்
உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், தமது கூட்டணி முன்னிலை பெற்றுள்ள சபைகளில் மேயர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது. அதேநேரம், எந்தவொரு தேசிய கட்சி ஆட்சி அமைப்பதற்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு அதிகமான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளது. […]
