உள்ளூர் முக்கிய செய்திகள்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்

  • May 2, 2025
  • 0 Comments

ஓய்வூதியம் பெற்றவர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2020 – 2024 ஆண்டுக்கான ஓய்வூதியம் பெற்றோரின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ‘2020 – 2024 ஓய்வூதிய ஒன்றியம்’ குழுவினர் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் […]

உள்ளூர்

பாம்புடன் சமைத்த உணவை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்

  • May 2, 2025
  • 0 Comments

பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பாம்பு ஒன்று இருந்த நிலையில், அந்த உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. சமையல்காரர் உயிரிழந்த பாம்பை ஒதுக்கிவிட்டு மதிய உணவை பரிமாறியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கிழக்கு இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மொகாமா நகரில் சுமார் 500 குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டதாக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசு தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டுகின்றதென சஜித் பிரேமதாச மேதின குற்றச்சாட்டு

  • May 1, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எட்டிய இணக்கப்பாட்டுக்கமைய ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதியை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த கொள்கைக்கு பின்னால் சென்று தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டும் திட்டங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். தொழிலாளர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி என்றும் பாடுபடும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். தலவாக்கலையில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய 6 பேர் கைது

  • May 1, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொல்புரம் பகுதியில் தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய ரதான சந்தேக நபர் இன்று வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை […]

இந்தியா

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மோடி அனுமதி!

  • April 30, 2025
  • 0 Comments

பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ,ந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எப்போது, எங்கு தாக்குதல்களை நடத்துவது என்பதை முடிவு செய்ய நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை ,ந்தியப் பிரதமர் வழங்கியுள்ளதாக, இந்திய அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று புது டெல்லியில் நடைபெற்ற விசேட […]

உலகம்

உக்ரைன் போரில் ரஷியாவுடன் கைகோர்த்துள்ள வட கொரியாவுக்கு புட்டின் நன்றி தெரிவிப்பு

  • April 28, 2025
  • 0 Comments

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது. அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சண்டையில் ரஷியா, வடகொரியா வீரர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புகார் கூறினார். இந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியா கணவன் மனைவி கொலை சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

  • April 28, 2025
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாஸ் உத்தரவிட்டார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 6 […]

உள்ளூர்

கொழும்பில் மனைவியை துண்டு துண்டாக பொதி செய்த கணவன் கைது

  • April 28, 2025
  • 0 Comments

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் இரண்டாவது கணவரும் மருமகனும் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் ஏப்ரல் 22 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. காணாமல்போன பெண்ணின் இரண்டாவது கணவரும் மருமகனும் இணைந்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

2025ம் ஆண்டு நேற்றுவரை (22-04) 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளது

  • April 23, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவற்றில் 23 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய 14 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூர்

கத்தோலிக்கர்களின் ஆன்மீக தலைவரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

  • April 22, 2025
  • 0 Comments

நித்திய இளைப்பாற்றியடைந்த பரிசுத்த பாப்பரசருக்கு சிவப்பு நிற குருத்துவ உடை மற்றும் தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் செபமாலையுடன் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் பரிசுத்த பாப்பரசர் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்த வத்திக்கானில் உள்ள அவரது இல்லமான காஸா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளன. பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் 23 ஆம் திகதி புதன்கிழமை வத்திக்கான் நேரப்படி காலை 9 மணிக்கு சென் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, 26 ஆம் திகதி […]