இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனம் அடையாளம்!
இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சி ன்டெக்லஸ் (Culex (Lephoceraomyia) cinctellus) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நுளம்பு இனம் ஒரு முக்கிய வைரஸ் கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க கூறியுள்ளார். இதையும் படியுங்கள்>உள்ளூராட்சி சபை தேர்தலில் சைக்கிளுக்கு ஆதரவு – அர்ச்சுனா எம்.பி […]
