உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கஞ்சாவின் ஊசலாட்டம் உச்சம்,யாழ்ப்பாணத்தில் 12 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • April 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (8-04) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன. அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர். […]

உள்ளூர்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை

  • April 7, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றுஇடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மனு எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுக்கள் மீதான எதிர்ப்புகளை மே […]

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியில் ஆஜர்!

  • April 7, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜராகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

உலகம்

டிரம்பின் வரிவிதிப்பு எதிரொலி… கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

  • April 7, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, இலங்கைக்கு 44 சதவீத வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார் . அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மகன் தாயை அடித்தே கொன்றுள்ளான்

  • April 7, 2025
  • 0 Comments

வீட்டு வளாகத்தில் நேற்று (06-04) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகனுடன் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து மகன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உடைந்த துடைப்பம் மற்றும் தடி ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கொலையுடன் தொடர்புடைய […]

முக்கிய செய்திகள்

சிங்கத்தின் வீடியோவை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி!

  • April 6, 2025
  • 0 Comments

நடப்பு ஐபிஎல் தொடர் மார்ச்.22இல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் ஜஸ்பிரீத் பும்ப்ராவின் வருகை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. பிஜிடி தொடரின் கடைசி போட்டியில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. 3-1 என இந்திய அணி ஆஸியிடம் வீழ்ந்தது. பின்னர்இ பும்ரா இல்லமலேயே சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதியில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது ரோஹித் தலைமையிலான இந்திய அணி. ஏப்ரல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில்; உருகுலைந்த நிலையில் ஆணா பெண்ணா என்று அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு!

  • April 1, 2025
  • 0 Comments

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று  காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆணா பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் இருந்து ஆண்கள் அணியும் மேல் ஆடை ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவை தாக்க தயாராகும் ஈரான்!

  • April 1, 2025
  • 0 Comments

டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் குறித்த செய்தியை வெளியிட்டு உள்ளது. அணுஆயுத உற்பத்தியில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை அந்நாடு மறுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க புதிய ஒப்பந்தத்தைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஈரான் அணு ஆயுதம் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் சர்வதிகாரம் எழிற்சி பெற்று வருகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

  • March 31, 2025
  • 0 Comments

நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகளையும் பதில்களையும் வழங்க முடியாத, வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே இருப்பதாக 220 இலட்சம் மக்களுக்கும் நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வருகிறது. மறுபுறம் ஜனநாயகமும் வீழ்ச்சியடைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். குண்டசாலை தேர்தல் தொகுதியில் நேற்று (30-03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அவர், நாடு […]

உலகம்

மியான்மர் பூமியதிர்ச்சியினால் பலி எண்ணிக்கை 1,600-ஐ கடந்தது

  • March 30, 2025
  • 0 Comments

மியான்மர் நாட்டின் மண்டாலே நகரருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்றுச் சிறப்புமிக்க துறவிகளுக்கான மடாலயமும் இதனால் பாதிக்கப்பட்டது. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1644 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலரது நிலைமை […]