உலகம் வணிகம்

உலகின் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை எலான் மஸ்க் அவரே அவருக்கு விற்றுள்ளார்

  • March 29, 2025
  • 0 Comments

உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். டிவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்துள்ளார். அதாவது எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான ஓ யுஐ நிறுவனத்துக்கு […]

உள்ளூர்

யாழப்பாணத்தில் 5ம் ஆண்டு மாணவியை தடியால் சின்னதாய் ஒரு தட்டு தட்டிய ஆசிரியர் கைது

  • March 28, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தரம் – 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலையில் , ஆசிரியரால் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. பரீட்சையின் பின்னர், வினாத்தாளை மாணவர்களிடையே பரிமாறி , அதனை மாணவர்களையே திருத்துமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். அதனை […]

முக்கிய செய்திகள்

தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செயதுள்ளது

  • March 28, 2025
  • 0 Comments

சட்டமூலம் 104ஐ எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் கனடா மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இது கனடா வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல இன […]

இந்தியா முக்கிய செய்திகள்

காதலியையும் காதலியின் தந்தையையும் சுட்டுக்கொன்ற இளைஞன் தற்கொலை

  • March 27, 2025
  • 0 Comments

பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள ஆரா தொடரூந்து ; நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான அமன் குமார் முதலில் அப்பெண்ணையும் அதன் பின் அவளது தந்தையையும் தொடரூந்து நிலையத்தில் நடைமேடைகளுக்குச் செல்லும் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார். பின் அதே இடத்திலேயே தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பத்தால் அங்கிருந்த பயணிகள் அதிரிச்சியில் மூழ்கினர். ஆர்பிஎப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு […]

முக்கிய செய்திகள்

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை வெற்றிக்கொண்டது

  • March 27, 2025
  • 0 Comments

நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரின் ; 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ், அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது. துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 29 ஓட்டங்களும் ரியான் பராக் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வேட்பு மனு நிராகரிக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வாசலில் மணியும் மானும்

  • March 25, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் தவறு உள்ளதாக கூறி அந்த பெண் வேட்பாளரை பட்டியலில் இருந்து நீக்கியமையால் , தேவையான பெண் பிரதிநிதித்துவம் இல்லை என மாநகர சபைக்கான வேட்பு மனுவை தேர்தல்கள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது. வேட்பு மனுவில் தேவையான […]

உலகம் வணிகம்

சாம்சங் நிறுவனத்தின் சீ.இ.ஓ. மாரடைப்பால் மரணம்

  • March 25, 2025
  • 0 Comments

சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 63 வயதான ஹான் ஹாங் ஹீ உயிரிழந்ததை சாம்சங் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிந்ததாக சாம்சங் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இணை தலைமை செயல் அதிகாரி உயிரிழந்ததை அடுத்து, அவரது பதவியை ஏற்க இருப்பது யார் என்பது குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. […]

இந்தியா சினிமா

சுஷாந்த் சிங் மரணம் கொலையல்ல தற்கொலை- சி.பி.ஐ. அறிக்கை

  • March 23, 2025
  • 0 Comments

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நான்கரை ஆண்டுகள் மேற்கொண்டு வந்த விசாரணைக்கு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, சி.பி.ஐ. இந்த வழக்கை முடித்து வைத்தது. இது குறித்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14, 2020 அன்று சுஷாந்த் சிங் தனது பாந்த்ரா பிளாட்டில் இறந்து கிடந்தார். இவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வந்த இரண்டு வழக்குகளில் இறுதி அறிக்கையை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

  • March 22, 2025
  • 0 Comments

யாழ். சேந்தாங்குளம் கடலில் நேற்று (21-03) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த 20 வயதுடைய பி.சாருஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக நேற்று மதியம் இளவாலை – சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர். கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் சாருஜன் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் […]

உள்ளூர்

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

  • March 21, 2025
  • 0 Comments

பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய முகவரிகளுக்கான பொதிகள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தை வந்தடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 20 பொதிகள் வந்துள்ளன. அவை உரிமை கோரப்படாததால், பொதிகளை பரிசோதிக்க 19 ஆம் திகதி தபால் மா அதிபரிடம் அனுமதி பெறப்பட்டது. பரிசோதனையின் போது 14 பொதிகளில் 272 கிராம் கஞ்சா போதைப் பொருளும், 2,049 […]