எலான் மஸ்க் கோரிக்கையை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கின்றனர். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆலோசனையை நிராகரித்துள்ளார். முன்னதாக 2030-ம் ஆண்டு செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அதற்கு முன்பே செயலிழக்க செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். […]
