உள்ளூர் முக்கிய செய்திகள்

சட்டவிரோத தையிட்டி விகாரை கட்டிடத்தை அகற்றுமாறு போராட்டம்

  • September 7, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி ஒவ்வொரு மாதமும் பூரணை தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்றைய தினமும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்

யாழ் செம்மணியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன

  • August 29, 2025
  • 0 Comments

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் இதுவரை மொத்தம் 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 174 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 37வது நாளாக தொடர்ந்தன. இந்த பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்நாள் பிரதமர் முன்னாள் ஜனாதிபதியை பார்க்கவில்லை.

  • August 26, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்த்ரீ விக்ரமசிங்க உடன் நேற்று (25-08) அதிகாலை நேரத்தில் சந்தித்ததாக பரவிய செய்திகளை பிரதமரின் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மட்டு மேயர் மிரட்டப்பட்டாரா?

  • August 21, 2025
  • 0 Comments

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். மட்டக்களப்பில் ஹர்த்தால் காரணமாக மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன்றைய  மாநகர சபை அமர்வில், முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் சபை நடைமுறைகளில் அனைத்து முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு, அனுமதிகள் வழங்கப்பட்டன. உறுப்பினர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நிதி மோசடியில் குற்றவாளியொருவர் அநுர அரசில் அமைச்சராய் இருப்பது பாரிய பிரச்சினை- புபுது ஜயகொட

  • August 19, 2025
  • 0 Comments

நிதி மோசடியில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது பாரிய பிரச்சினை என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் நேற்று (18-08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை எதிர்த்து, அவர் உர கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன என அவர் சுட்டிக்காட்டினார். 80 இலட்சம் […]

உள்ளூர்

இலங்கைக்கு ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்

  • August 14, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க், இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான அரசாங்கத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குறித்த பொறுப்பை நீண்டகாலமாக ஏற்க மறுத்துள்ளதை கண்டித்து, ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தியுள்ளார். அதன் மூலம், இராணுவத்தினால் பிடிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல், புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்தல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை விடுவித்தல், பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சிகளை ஆதரித்தல், காணாமல் போனவர்கள் […]

உள்ளூர்

‘நேற்று – இன்று – நாளை’ எனும் தொனிப்பொருளில் கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு நடைப்பபெற்றது

  • July 28, 2025
  • 0 Comments

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக யாழ்ப்பாணத்தில் நேற்று இக்கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பம், சிவஞானம் சிறிதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் பட்டப்பகலில் முகமூடியுடன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் தங்கச்சங்கிலியுடன் தப்பியோட்டம்

  • July 24, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருங்கன் வீதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் முகமூடியுடன் ஒருவர் புகுந்து கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியை வீட்டில் தனிமையில் இருந்த வேளை, வீட்டின் பின்புற வேலியின் வழியாக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது. திருடன், ஆசிரியையின் கைகளில் அணிந்திருந்த வளையல்களையும் பறிக்க முயன்றுள்ள […]

உள்ளூர்

காதலியை கழுத்தறுத்து கொன்று விட்டு காதலன் தற்கொலை

  • July 23, 2025
  • 0 Comments

இளம் பெண்ணை கொன்று அவரது பெற்றோரை வெட்டி காயப்படுத்திய இளைஞன் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பதியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரங்கல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் அவரது காதலன் என கூறப்படும் இளைஞனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன் பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் தனது காதலி எனப்படும் இளம் பெண்ணொருவரின் வீட்டிற்கு பிரவேசித்த […]

உள்ளூர்

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலைகளில் மாற்றம்!

  • June 30, 2025
  • 0 Comments

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும். மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் […]