உள்ளூர் முக்கிய செய்திகள்

ஒன்பது மாத சிறைத்தண்டனை பெற்றிருந்த ஞானசார தேரர் பிணையில் விடுதலை

  • February 25, 2025
  • 0 Comments

இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளது. ஞானசார தேரர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றத்திற்காக ஜனவரி 9ம் திகதி நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஒன்பது மாதசிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.

இந்தியா

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது

  • February 25, 2025
  • 0 Comments

வங்கதேசம் இன்று நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏ பிரிவில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறும். முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் […]

இந்தியா உள்ளூர் முக்கிய செய்திகள்

தலைமன்னார் கடலில் மீண்டும் 32 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்

  • February 24, 2025
  • 0 Comments

தலைமன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து […]

இந்தியா

இலங்கை கடற்படைக்கெதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம்

  • February 24, 2025
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தது. ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தமிழக […]

உலகம்

பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை கவலைக்கிடம் என வத்திகான் அறிவிப்பு

  • February 23, 2025
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபை தலைவரான 88 வயதுடைய பரிசுத்த பாப்பரசரின் பிரான்சிஸ் ஆண்டகையின் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், […]

உலகம்

போப் ஆண்டவர் பிரான்சிஸின் உடல்நிலை சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளதாக வட்டிகான் அறிவித்துள்ளது

  • February 21, 2025
  • 0 Comments

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயதுடைய போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திவந்தார். தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார். இதற்கிடையே, ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் இந்தியர்களுக்கு 182 கோடி ரூபாவினை பைடன் கொடுத்ததாக டிரம்ப் குற்றச்சாட்டு

  • February 21, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படும் 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை அறிவித்தது. இந்தியாவிடம் நிறைய பணம் இருப்பதாகவும், தங்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டியதில்லை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்தியாவினால் இலங்கை சிவில் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

  • February 20, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் இலங்கையின் நிர்வாக மேம்பாட்டுக்கான நிறுவனம் (ளுடுஐனுயு) ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து வருட காலத்திற்கு 1,500 இலங்கை சிவில் அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு வழிவகை செய்வதாக அமைந்துள்ளது. இலங்கை அரசின் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் அழைப்பின் […]

இந்தியா உலகம் கனடா முக்கிய செய்திகள்

கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம் எங்கேயென இந்தியாவில் விசாரணை

  • February 20, 2025
  • 0 Comments

திரைப்பட பாணியில் கனடா விமான நிலையத்தில் 6,600 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்தியா விசாரணயைத் துவக்கியுள்ளது. 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மீது ‘பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அந்த பார்சல்களில் 6,600 தங்கக்கட்டிகள் இருந்துள்ளன. அவற்றின் எடை சுமார் 400 கிலோகிராம். கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. […]

உலகம் முக்கிய செய்திகள்

6 பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறித்துள்ளது

  • February 19, 2025
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பை சேர்ந்த மூத்த நபர் ஒருவர், சனிக்கிழமை ஆறு உயிருள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதாகவும், வியாழக்கிழமை நான்கு பேரின் உடல்களை திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். காசா பகுதிக்குள் மொபைல் வீடுகள் மற்றும் கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் இவ்வாறு அறிவித்துள்ளது. இந்த ஆறு பேர், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பணயக்கைதிகள் ஆவர். ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் அறிவிப்பில், […]