முக்கிய செய்திகள்

ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீதான தாக்குதலின் பின்னணியில் பொலிஸார் உள்ளதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்

  • February 19, 2025
  • 0 Comments

ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார். முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது பளை பகுதியில் கல்வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஆசியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஒன்றின் மூலம் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் […]

முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் வீடொன்றின்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

  • February 18, 2025
  • 0 Comments

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (17-02-2025) இரவு இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த வீட்டில் யாரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டின் உரிமையாளரைப் பழிவாங்கும் நோக்கில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் வீட்டின் சில பகுதிகள் பாதிப்படைந்துள்ளது இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

முக்கிய செய்திகள்

வரவு செலவு திட்ட எதிரொலி உணவுப்பொருட்கள் இன்று முதல் விலை அதிகரிப்பு

  • February 18, 2025
  • 0 Comments

சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாவரவு செலவு திட்ட எதிரொலி உணவுப்பொருட்கள் இன்று முதல் விலை அதிகரிப்பு சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கையில்இ இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. […]

முக்கிய செய்திகள்

வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்று தொடக்கம் 25ம் திகதி வரை நடைபெறும்

  • February 18, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

ஜேவிபியும் முன்னர் தேர்தலை பிற்போட ஆதரவளித்துள்ள கட்சி தான் என்கிறார் நாமல் ராஜபகஸ

  • February 18, 2025
  • 0 Comments

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு சார்பானவர்களால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடு அரசாங்கத்துக்கு அழகல்ல, தேர்தலை பிற்போடும் பாவச்செயலுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த காலங்களில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்களும் உள்ளோம். இருப்பினும் தேர்தல் நடவடிக்கைகள் சாதாரண தர பரீட்சைக்கு இடையூறாக அமைய கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (17-02-2025) நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார […]

இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியா-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

  • February 17, 2025
  • 0 Comments

இந்தியா-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 3,544 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். […]

இந்தியா

ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்தார்

  • February 17, 2025
  • 0 Comments

தலைநகர் டெல்லியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கிடையே, டெல்லியில் பா.ஜ.க. பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுவிட்டு திரும்பி உள்ளார். இந்நிலையில், டெல்லி ராஸ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியுள்ளாhர்

இந்தியா

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஸி தாஜ்மகாலை குடும்பத்துடன் பார்த்து மகிழந்தார்

  • February 16, 2025
  • 0 Comments

இந்நிலையில், ரிஸி சுனக் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு நேற்று தனது குடும்பத்தினருடன் சென்றார். தாஜ்மகாலைப் பார்வையிட்ட அவர், அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் கருத்துகளை பதிவிட்டார். ரிஸி சுனக்குடன் அவரது மனைவி அக்ஸதா மூர்த்தி, மகள்கள் மற்றும் மாமியார் சுதா மூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர். இதுதொடர்பாக, ரிஸி சுனக் கூறுகையில், தாஜ்மகாலைப் போல உலகின் சில இடங்கள் ஒன்றிணைக்க முடியும். இதைப் பார்க்கும் குழந்தைகள் மறக்க மாட்டார்கள். அன்பான விருந்தோம்பலுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் முழு […]

முக்கிய செய்திகள்

அரச சேவையினை பெற வரும் மக்களை அலைக்கழிக்க வேண்டாமென வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்

  • February 15, 2025
  • 0 Comments

அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்தால் உடனடியாக அவர்களை அன்பாக அணுகி சேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள். உங்களால் முடியாவிட்டால் மேலதிகாரிகளிடம் அழைத்துச் சென்று பொதுமகனின் தேவையை எப்படி நிறைவு செய்து கொடுக்கலாம் என்று சிந்தியுங்கள். ‘பந்தடிப்பது’ போன்று வேலைகளை தட்டிக்கழித்து பொதுமக்களை அலைக்கழிக்காதீர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். கடந்த காலங்களில் தவறாக ஒரு விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதையே தொடர்வதற்குத் தான் பலர் விரும்புகின்றார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு யாரும் தயாராக இல்லை. தவறானது என்று தெரிந்தால் […]