முக்கிய செய்திகள்

வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

  • February 11, 2025
  • 0 Comments

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டது. சம்பவத்தில் சாந்தசோலை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. அவர் மாடிக்கட்டடத்தில் […]

இந்தியா

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்- மம்தா

  • February 11, 2025
  • 0 Comments

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் பேசும்போது, ‘டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. அரியானாவில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. வென்று விட்டது. எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் இல்லை. […]

இந்தியா

பெங்களூருவில் இன்று சர்வதேச விமான கண்காட்சி ஆரம்பமாகின்றது

  • February 10, 2025
  • 0 Comments

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு ஹெலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற இருக்கிறது. 10-ம் தேதி தொடங்கும் விமான கண்காட்சி 14-ம் தேதி வரை என 5 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெற உள்ளது. விமான கண்காட்சி நடைபெறும் […]

இந்தியா

தமிழக மீனவர்கள் 14 பேர் கைதுசெய்து இலங்கை கடற்படை அட்டூழியம்

  • February 9, 2025
  • 0 Comments

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர். நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் தமிழகத்தை சேர்ந்த 2 […]

இந்தியா முக்கிய செய்திகள்

 டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!

  • February 8, 2025
  • 0 Comments

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் கடந்த 02ம் திகதி நடைபெற்றது. தலைநகரில் சுமார் 25 ஆண்டுகள், அதாவது கால் நூற்றாண்டுகளுக்குப் பின்பு பாரதிய […]

முக்கிய செய்திகள்

சாணக்கியன் எம்பி நிதி மோசடி செய்தாரா?

  • February 8, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார். குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள ஈழமக்கள் […]

இந்தியா

தமிழ்நாடு திருச்சி பாலியல் வழக்கில் முதலாவது சந்தேன நபருக்கு குற்றவாளிக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

  • February 8, 2025
  • 0 Comments

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்தப் பள்ளியின் தாளாளரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளர், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தார்

  • February 7, 2025
  • 0 Comments

வவுனியா புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு […]

முக்கிய செய்திகள்

மாவையண்ணன் செத்த பின்னரும் அவரை கொலை செய்யும் சீவிகே. சிவஞானம்

  • February 7, 2025
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த அரசியல்குழுத் தலைவரும் மூத்த தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜாவின் குடும்பத்தவர்களிடத்தில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தருணத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்ட தச்சன்காடு இந்து மயானத்தில் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் வடக்கு, கிழக்கு தமிழர்களின் சார்பில் ‘மாவையின் மரணத்திற்கு காரணமான […]

முக்கிய செய்திகள்

இன்டர்போலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மூவர் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டவரப்பட்டுள்ளனர்

  • February 7, 2025
  • 0 Comments

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களின் விபரங்களும் குற்றச் செயல்களும் பின்வருமாறு ; 01. 42 வயதுடைய ரன்முனி மஹேஷ் ஹேமன்த சில்வா ; […]