உலகம்

இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக லெபனான் குற்றச்சாட்டு

  • February 7, 2025
  • 0 Comments

ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான லெபனானின் இரண்டு ஆயுத கூடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. லெபனான் எல்லைக்கு உட்பட்ட இரண்டு ஆயுத கிடங்குகளில் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் அவற்றை துல்லியமாக தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் […]

முக்கிய செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் சுங்க அதிகாரிகளின் சங்கத்தின் தலைவரை கைதுசெய்க – முஜிபுர் ரஹ்மான்

  • February 6, 2025
  • 0 Comments

தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டமை பொய் என்றால் சுங்க அதிகாரிகளின் சங்கத்தின் தலைவரை கைதுசெய்து விசாரணை செய்க – முஜிபுர் ரஹ்மான் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டமை பொய் என்றால் சுங்க அதிகாரிகளின் சங்கத்தின் தலைவரை கைதுசெய்து விசாரணை செய்க – முஜிபுர் ரஹ்மான் சுங்கத்திலிருந்து சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எங்களை குற்றம் சாட்டாமல் இதனை வெளிப்படுத்திய சுங்க தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் […]

அரசாங்கம் அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளனர்

  • February 5, 2025
  • 0 Comments

அடக்குமுறைகளை கைவிட்டு அரசாங்கம் ஜனநாயக முறையில் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அரசாங்கம் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும்போது அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது. கம்பஹாவில் அது இடம்பெற்றுள்ளது. அதேபோன்று கம்புறுப்பிட்டியவில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இடம்பெறும்போது அங்கும் அடக்குமுறை இடம்பெற்றுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் சர்வதேச நாணய […]

முக்கிய செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவின் காலத்தில் நிதி திருப்பி அனுப்படவில்லை- ஈபிடிபி இன் ஊடக செயலர் சிறீகாந்

  • February 5, 2025
  • 0 Comments

அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கு அரச அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்ளை முன்வைப்பதாகவும், இதுதொடர்பாக தமிழ் தரப்புக்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் – ஜனாதிபதி அனுர தலைமையில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எந்தவிமான […]

உலகம்

வரியை உயர்த்திய விவகாரத்தில் அமெரிக்கா மீது [WTO] சீனா வழக்கு தொடரவுள்ளது

  • February 4, 2025
  • 0 Comments

அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது. […]

முக்கிய செய்திகள்

பழைய பிரச்சினைகளுக்கு பழைய தீர்வுகளுக்கு மாறாக, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும்- வாழ்த்துச் செய்தியில் சஜித் பிரேமதாஸ

  • February 4, 2025
  • 0 Comments

பழைய பிரச்சினைகளுக்கு பழைய தீர்வுகளையன்றி, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்துக்குப் பின்னர் நாம் உரிமையாகப் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது நமது பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 77ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், சுதந்திரம் மற்றும் அதன் பின்னர் நமது தாய்நாடு கடந்துவந்த காலகட்டத்தை மீண்டும் நினைவுகூருவது அவசியமாகிறது. சுதந்திரம் பெற்ற தருணத்தில், நாம் ஒரு நாடாக வறுமை, நோய்கள் […]

இந்தியா முக்கிய செய்திகள்

ராகுல் காந்தி பொய்யுரைப்பதால் இந்தியாவுக்கு வெளிநாட்டில் மரியாதை குறையும்- ஜெய்சங்கர்

  • February 4, 2025
  • 0 Comments

பாராளுமன்ற வரவு செலவு திட்ட கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்காக பாராளுமன்றம் நேற்று (03-02-2025) கூடியது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார் அப்போது அவர், ‘இந்தியாவும் உற்பத்தியில் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தால், […]

உலகம் முக்கிய செய்திகள்

ஐரோப்ப நாடான கிரீசில் 72 மணித்தியாலங்களில் 200 முறை நிலநடுக்கம்

  • February 4, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடான கிரீசில் சாண்டோரினி தீவு அமைந்துள்ளது. இங்கு கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் பதிவாகின. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாண்டோரினி தீவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது இதனையடுத்து நிலநடுக்கத்தால் ஏற்படும் ஆபத்தை குறைக்க அரசின் வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைபிடிக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை ; கரிநாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது

  • February 3, 2025
  • 0 Comments

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது பெப்ரவரி 4 இல் இருந்து சிறிலங்கா தனது சுதந்திர நாளாகக் கொண்டாடிவருகின்றது ஆனால் அன்றைய நாள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்ட தமிழர்களின் இறையாண்மை சிங்கள இனவாதப்பூதத்திற்கு தரைவார்க்கப்பட்ட நாளாகும். சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும் பேரினவாத மூலோபாயத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. மாறாக சிங்களக்குடியேற்றங்கள் அகற்றப்படவோ நிறுத்தப்படவோ அல்லது பௌத்தமயமாக்கல் அகற்றப்படப் போவதில்லை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகட்கு நீதிவழங்கவோ போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ எந்தவாய்ப்பும் இல்லை. இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து […]

முக்கிய செய்திகள்

யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கிய ஒருவர் பலி மற்றொருவர் காயம்

  • February 3, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் முதலைக்குடாவில் வசிக்கும் 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் கிராம உத்தியோகத்தரால் கடந்த மார்கழி மாதப் […]