இந்தியா

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது – இலங்கை கடற்படை அராஜகம்

  • January 26, 2025
  • 0 Comments

தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். தனுஸ்கோடி மற்றும் தலைமன்னார் கடற்ப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்தது. அத்துடன் மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.  

முக்கிய செய்திகள்

இராஜபக்ஸக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்தால் நாங்கள் அச்சமடைய போவதில்லையென நாமல் தெரிவித்துள்ளார்

  • January 26, 2025
  • 0 Comments

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபகஸ தெரிவித்தார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமது சகோதரரான யோசித்த ராஜபக்ஸவை நேற்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேலுள்ளவாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எனது தம்பியை தங்காலையில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பாக அழைத்து […]

முக்கிய செய்திகள்

அமெரிக்க நீதிமன்றம் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்தது

  • January 25, 2025
  • 0 Comments

அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார் இந்த உத்தரவு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ம் திகதி முதல் அமலுக்கு வரும் என்பதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அறுவை சிகிச்சை வழியாக […]

முக்கிய செய்திகள்

பாராளுமன்றத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாடுவதால் இனங்கள் ஐக்கியப்படும்- சபாநாயகர்

  • January 25, 2025
  • 0 Comments

தைப்பொங்கல் பண்டிகை இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன்முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது. இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள், அமைச்சர்கள், மற்றும் தமிழரசுக் கட்சி, ஜேவிபி இன் பராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் முன்மொழிவுக்கு அமைய, சபாநாயகரின் ஆலோசனையின் கீழ், புத்த சாசன, சமய […]

இந்தியா

கெஜ்ரிவாலின் உயிருடன் விளையாடுகிறீர்களா?: என அமித்ஸா மற்றும் மோடியிடம் கேள்வியெழுப்பியுள்ள அதிஸி

  • January 24, 2025
  • 0 Comments

டெல்லி சட்டசபை தேர்தல் திர்வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல் அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார். கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில போலீசார் வழங்கும் பாதுகாப்பை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி போலீசார் முறைப்பாடு செய்துள்ளனர் இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பஞ்சாப் மாநில போலீஸ் திரும்பப் பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு […]

உலகம்

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியை இஸ்ரேல் போட்டுதள்ளியது?

  • January 23, 2025
  • 0 Comments

ஈரான் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கிடையே, இஸ்ரேல்-காசா இடையிலான போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி; சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஸேக் முகமது அலி ஹமாதி. அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். கடந்த 1985-ல் 153 பயணிகளுடன் ரோம் நகரில் இருந்து […]

முக்கிய செய்திகள்

அனுர புத்தாவுக்கு ‘நான் மகிந்த ராஜபக்ச என்பது மறந்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த தடார் அடி அடித்துள்ளார்

  • January 21, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார் அனுரகுமார திசநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்கட்சி அரசியல்வாதி போலநடந்துகொள்கின்றார் என மகிந்த ராஜபக்ச விமர்சித்துள்ளார் நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், அவரது பேச்சுக்கள் அரசியல் மேடைகளிற்கும் தேர்தல் காலத்தில் அவர் போலி வாக்குறுதிகளை வழங்கியதை […]

சினிமா

இயக்குனர் மிஸ்கின் அருவருக்கதக்கதாக மேடையில் பேசியதால் குமுறும் நெட்டிசன்கள்

  • January 21, 2025
  • 0 Comments

இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘பாட்டல் ராதா.’ பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூபேஸ் ராஜி ஒளிப்பதிவு செய்துள்ள பாட்டல் ராதா திரைப்படத்திற்கு ஸான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. […]

சினிமா

விருது வென்றார் நடிகை தேவயானி

  • January 21, 2025
  • 0 Comments

நடிகை தேவயானி இதுவரை 100 திரைப்படத்திற்கும் மேல் நடித்துள்ளார். 90ஸ் களின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இந்நிலையில் நடிகை தேவயானி தற்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படத்தை முதன்முறையாக இயக்கி, எழுதி, தயாரித்துள்ளார் தேவயானி. இந்த குறும்படம் 17-வது ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைக்கான குறும்படம் என்ற விருதை வென்றுள்ளது. இப்படத்திற்கு இசையை இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பி.லெனின் செய்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ராஜன் மிர்யாலா மற்றும் ஒலி […]

முக்கிய செய்திகள்

யாழில் தமிழ்மொழி 3வது இடத்தில் இருப்பதால் அதிர்ச்சியுற்றேன் – அமைச்சர் சந்திரசேகரன்

  • January 20, 2025
  • 0 Comments

யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசாரம் மையம் […]