முக்கிய செய்திகள்

யாழில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

  • January 20, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஈழத் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்தக் கலாசார மையம் தமிழ் மக்களின் அடையாளமாக தற்போது காணப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் […]

உலகம்

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட 3 பிணைக்கைதிகளும் இஸ்ரேல் திரும்பினர்

  • January 20, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதங்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு (42 நாட்கள்) நடைமுறையில் இருக்கும். கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச்சென்றனர். பின்னர் தற்காலிகமாக போர் நிறுத்தத்தின்போது […]

இந்தியா முக்கிய செய்திகள்

ஆமைக்கறி சீமானின் அப்பாடக்கர் வெளிவந்தது போட்டுடைதார்- இயக்குநர் சங்ககிரி

  • January 20, 2025
  • 0 Comments

பிரபாகரனுடன் சீமான் இருக்கும் போட்டோவை எடிட் செய்ததே நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது அந்த புகைப்படத்தை கவனித்தீர்கள் என்றால் சீமானுக்கு நிழல் வைத்திருப்பேன் என தெரிவித்த அவர் என்னால் முடிந்த அளவுக்கு அப்புகைப்படத்தை சிறப்பாக எடிட் செய்து கொடுத்ததாக மேலும் தெரிவித்துள்ளார் பெரிதும் பாராட்டப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அடுத்ததாக ‘பயாஸ்கோப்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், விடுதலை […]

முக்கிய செய்திகள்

யாழ். குருநகர் சிறிய சூறாவளி : 49 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்

  • January 19, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) வீசிய மினி சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், குருநகர் ஜே 68 மற்றும் ஜே 69 கிராம சேவையாளர் பிரிவுகளில் 49 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை மூவர் காயமடைந்துள்ளனர். அதேவேளை 49 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன. சேத விபரங்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ […]

முக்கிய செய்திகள்

நீதியை நிலைநாட்டுவதே அரசின் நோக்கம் என பிரதமர் தெரிவித்துள்ளார்

  • January 19, 2025
  • 0 Comments

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீன மக்கள் குடியரசின் முழுமையான நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தை நேற்று (18) பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், ஒரு நாட்டின் நீதி முறைமையில், நாட்டு மக்களுக்கு நீதி வழங்குவதற்கான வசதிகளுக்காக செய்யப்படும் […]

முக்கிய செய்திகள்

சீனாவுக்குள் இலங்கை சிக்கவில்லையென்கிறார் ஜனாதிபதி அநுர

  • January 19, 2025
  • 0 Comments

சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நிராகரித்துள்ளார் உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம், வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக கருதுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் சின்ஹூவாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றன என இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி […]

முக்கிய செய்திகள்

அரசியலமைப்பு வரைவுக்காக 7 பேரை நியமித்துள்ளதாக தமிழரசுக் கட்சி தெரிவிப்பு

  • January 19, 2025
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசு கட்சி இறுதியாக கோட்டாபய ராஜபகஸ அரசாங்கத்தின் நிபுணர் குழுவுக்கு சமர்ப்பித்த அரசியலமைப்பு வரைவினை அடிப்படையாகக் கொண்டு மேலதிக உள்ளடக்கங்களை ஆராய்வதற்காக கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது, கட்சி மட்டத்திலும் துறைசார்ந்த நிபுணர்கள் மட்டத்திலும் ஆராய்ந்து மேம்பட்ட வரைவினை இறுதி செய்ததன் பின்னர் அடுத்தகட்டமாக தமிழ் தேசியப் பரப்பில் உள்ள ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தமிழ் அரசு கட்சி தயாராகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

இந்தியா

நடிகர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் காந்தி மீது வைக்குமாறு அண்ணாமலை தெரிவிப்பு

  • January 19, 2025
  • 0 Comments

மதுரையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: த.வெ.க. தலைவர் விஜய்யை சமீபத்தில்திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார். தற்போது செல்வப்பெருந்தகை இந்தியா கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை. பா.ஜ.க. யாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. திமுக பிறக்கும் முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் […]

இந்தியா

மோட்டார் பைக்கில் ஓடியப்படியே காதலியுடன் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த இளம்ஜோடி

  • January 18, 2025
  • 0 Comments

‘ரீல்ஸ்’ மோகத்தால் இளைஞர்களும், இளம்பெண்களும் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கான்பூர் நகரை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று பைக்கில் செல்லும் போது ரீல்ஸ் வீடியோ எடுத்த காட்சிகள் இணையத்தில் பரவின. அதில், வாலிபர் தனது காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் உள்ளது. மேலும் அந்த வாலிபர் காதலியை பைக்கில் அமர வைத்தவாறே ஓட்டி செல்கிறார். இருவரும் ஹெல்மெட்டும் அணியவில்லை. மாறாக ஒரு பாடலுக்கு […]

இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற கார் மீது தாக்குதல்

  • January 18, 2025
  • 0 Comments

டெல்லி மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் ஏராளமான இலவச அறிவுப்புகளை அள்ளி வீசியுள்ளது. மும்முனை போட்டி என்றாலும் ஆம் ஆத்மி- பாஜக இடையில்தான் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சி தலைவர்களும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் […]