இந்தியா

எங்களை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது-ஜெய்சங்கர்!

  • December 23, 2024
  • 0 Comments

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 27வது ஸ்ரீ சந்திர சேக ரேந்திர சரஸ்வதி தேசிய விருது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. இதில் பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். சுதந்திரத்தை நடுநிலைமையோடு ஒருபோதும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எங்களின் தேசிய நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதைச் செய்வோம். தொடர்ந்து பேசிய அவர், உலகளாவிய அளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகள் மேல் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது. […]

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி) 22.12.2024

  • December 23, 2024
  • 0 Comments

மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடகிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது கிளிநொச்சியில் புதையல் தேடிய சிங்களவர்கள் நோர்வே தூதுவர் பிரதமரை சந்தித்தார்   https://youtu.be/WKOY0revRak

உலகம்

ஆப்கனை அதிகாலையில் உலுக்கியது நிலநடுக்கம்

  • December 22, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர். தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

உள்ளூர்

மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன்

  • December 22, 2024
  • 0 Comments

மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ள முடிவில் மாற்றம் செய்யக்கூடாதென்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இராஜினாமா செய்துவிட்டு, இரண்டு மாதங்களின் பின்னர் அதனை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை அனுப்பிவைப்பதனால் அதனை ஏற்க முடியாது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியில் மாவை சோ.சேனாதிராஜா நீடிப்பதை அங்கீகரிப்பதா? இல்லையா? என்பது பற்றித் தீர்மானிக்கும் பொருட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியாவில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கடந்த 14 ஆம் திகதி […]

உலகம்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப மேலும் கால தாமதம்

  • December 19, 2024
  • 0 Comments

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில் மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சென்றனர். போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளனர் இருவரும் 2025 […]

இந்தியா

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

  • December 18, 2024
  • 0 Comments

கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு தடைகளை தாண்டி இந்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் ஜாமின் பெற்று சமீபத்தில் விடுதலை ஆனார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். முன்னதாக, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் […]

உலகம்

பிரான்ஸ் மயோட்டா தீவை தாக்கிய புயலால் பலி எண்ணிக்கை ஆயிரங்களை கடக்கலாம்

  • December 16, 2024
  • 0 Comments

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்த புயலால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்த […]

உலகம்

கனடாவில் வரி விடுமுறை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

  • December 16, 2024
  • 0 Comments

கனேடிய மத்திய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய பண்டிகை காலத்தில் மக்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வார இறுதி நாட்கள் தொடக்கம் இந்த வரிச்சலுகை அதாவது வரி விடுவிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிகளுக்கு இந்த வரிசலுகை அமுலில் இருக்கும்என தெரிவிக்கப்படுகின்றது இதன் மூலம் நாட்டில் வரி செலுத்துவோர் சுமார் 1.5 பில்லியன் டொலர்கள் வரையில் சேமிக்க முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி […]

உள்ளூர்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(15.12.2024 )

  • December 16, 2024
  • 0 Comments

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு  மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் கப்பல் சேவை ஆரம்பம் யாழில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி! மஹிந்தவின் பாதுகாப்பு விலக்கப்பட்டது குமுறுகிறார் -மனோஜ் கமகே  இலங்கையின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்கப்படும் என்கிறார் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் https://youtu.be/2svXrqbsfvc

இந்தியா

இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி முறைமையா?

  • December 15, 2024
  • 0 Comments

இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வரவே ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமூலத்தை பா.ஜ.க.கொண்டு வந்துள்ளது என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார் திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- ஆதவ் அர்ஜீனா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை. எந்த அழுத்தத்தாலும் என்னை […]