அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தடையால் தென்னாசிய நாடுகளிற்கு கூட செல்ல முடியவில்லையென – சவேந்திரசில்வா கவலை
2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானியும்,இராணுவதளபதியும் இறுதி யுத்தத்தில் 58 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியருவமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கங்களின் இந்த தோல்வி , விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என சவேந்திரசில்வா தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சவேந்திரசில்வா இந்த பேட்டியில் அரசாங்கங்கள் அரசியல் […]
