உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியா கணவன் மனைவி கொலை சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

  • April 28, 2025
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாஸ் உத்தரவிட்டார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 6 […]

உள்ளூர்

தமிழ் தேசிய பேரவைக்கு மக்கள் வாக்களிக்கவேண்டுமென மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் வேண்டுகோள்

  • April 28, 2025
  • 0 Comments

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய பேரவைக்கு வாக்களிக்குமாறு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் தெரிவித்துள்ளது கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் அழிக்கப்பட்ட தீர்ப்புக்கு மதிப்பளித்து தனது போக்கை மாற்றி தானாக முன்வந்து தமிழ்தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை அமைப்பதற்கு செயலாற்றிய கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது. தமிழ்தேசிய பேரவைக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகளும் அதன் […]

இந்தியா முக்கிய செய்திகள்

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

  • April 22, 2025
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் அரசாணை வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ரவி குறித்த காலத்தில் முடிவெடுக்காமல் இருந்ததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பொலிஸாருக்கு தண்ணி காட்டும் இஷாரா செவ்வந்தி

  • April 22, 2025
  • 0 Comments

கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி மற்றும் 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகிய இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனம் அடையாளம்!

  • April 20, 2025
  • 0 Comments

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சி ன்டெக்லஸ் (Culex (Lephoceraomyia) cinctellus) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நுளம்பு இனம் ஒரு முக்கிய வைரஸ் கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க கூறியுள்ளார். இதையும் படியுங்கள்>உள்ளூராட்சி சபை தேர்தலில் சைக்கிளுக்கு ஆதரவு – அர்ச்சுனா எம்.பி […]

இந்தியா முக்கிய செய்திகள்

உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை திருடிய வைத்தியசாலை ஊழியர்!

  • April 20, 2025
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடலில் இருந்து தங்க நகைகளை வைத்தியசாலை ஊழியர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை அந்த நபர் திருடுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உத்தரப்பிரதேசத்தின் ஹிரன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளம் பெண் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரின் உடல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு […]

உள்ளூர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தாரிகள் யாரென அனுர அறிவிப்பாரா? முஜிபுர் ரஹ்மான் எம்.பி

  • April 20, 2025
  • 0 Comments

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வெளியிடவுள்ள விசேட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றோம். இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சாரா ஜெஸ்மின் மற்றும் சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை குறித்த தகவல்களையும் அரசாங்கம் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேவாலயங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

  • April 18, 2025
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களின் பாதுகாப்பபை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அறிவுறுத்தியுள்ளார். நேற்று (17-04) நடைபெற்ற விஷேட கூட்டத்தின் போதே இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்கும் […]

உள்ளூர்

காதலன் நீரில் மூழ்கி மரணம் காதலி இன்று தற்கொலை யாழில் சம்பவம்

  • April 18, 2025
  • 0 Comments

தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயர்மாய்துள்ளார். யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17-04) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிசாரிற்கு கிடைத்த […]

உள்ளூர்

கிளிநொச்சியின் 3 பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு

  • April 16, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று புதன்கிழமை மாவட்டங்களின் அஞ்சல் திணைக்களங்களிடம் கையளிக்கப்பட்டதாக அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார அறிவித்துள்ளார். வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், குறித்த பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் […]