உலகம் முக்கிய செய்திகள்

டொனால்ட் ரம்புக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் ஜனாதிபதி!

  • April 15, 2025
  • 0 Comments

வடக்கு கிழக்கு உக்ரைன் நகரான சுமி மீது ரஷ்ய நடத்திய அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இரு தரப்பினரிடையே தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி […]

இந்தியா முக்கிய செய்திகள்

தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

  • April 15, 2025
  • 0 Comments

அவருடைய வாழ்த்துச் செய்தியில், ‘மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துகள்! இந்தப் புத்தாண்டு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசிர்வதிக்கப்படட்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். இதையும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

எதிர்கட்சி தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

  • April 14, 2025
  • 0 Comments

‘துக்கம் கண்ணீர் இல்லாமல் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த புத்தாண்டுக்காக ஒன்றிணைவோம் என தமிழ், சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையர்களின் சிறப்பான கலாசார விழாவான சிங்கள – தமிழ் புத்தாண்டுக்காக எமது நாட்டின் அன்பான மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சூரியன் மீன ராசியிலிருந்து […]

உள்ளூர்

பிள்ளையானை 3 மாதங்கள் தடுப்பில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

  • April 12, 2025
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கடந்த செவ்வாய்க்கிழமை (08-04) மாலை மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், […]

உள்ளூர்

ஜனாதிபதி இன்று அவசரமாக சர்வகட்சி தலைவர்களை சந்திக்கின்றார்

  • April 10, 2025
  • 0 Comments

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி தொடர்பாக இன்று அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான ஒப்புதலைத் தாம் வழங்கி இருப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வாறான ஒரு சர்வகட்சி கூட்டத்தை நடத்துமாறு நேற்று காலை எதிரணியைச் சேர்ந்த 12 கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மாடுகள் கடத்தும் மஸ்தான் எம்.பி. வவுனியாவில் சம்பவம்

  • April 9, 2025
  • 0 Comments

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 மாடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (08-04) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், ஒரு லொறியை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குறித்த லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி 20 மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டது. லொறியில் இருந்த மூவரையும் கைது செய்த பொலிஸார், 20 மாடுகளையும் பொலிஸ் நிலையத்திற்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கஞ்சாவின் ஊசலாட்டம் உச்சம்,யாழ்ப்பாணத்தில் 12 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • April 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (8-04) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன. அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர். […]

உள்ளூர்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை

  • April 7, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றுஇடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மனு எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுக்கள் மீதான எதிர்ப்புகளை மே […]

உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியில் ஆஜர்!

  • April 7, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜராகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

உலகம்

டிரம்பின் வரிவிதிப்பு எதிரொலி… கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

  • April 7, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, இலங்கைக்கு 44 சதவீத வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார் . அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் […]