உள்ளூர்

7 மாதங்களில் 79 துப்பாக்கிச்சூடு 52 பேர் உயிரிழப்பு; – அமைச்சர் ஆனந்த விஜேபால

  • May 10, 2025
  • 0 Comments

போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்டுள்ளது. 2024.09.21 முதல் 2025.05.07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 79 துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (9-05) நடைபெற்ற அமர்வின்போது சமூக கட்டமைப்பில் நாளாந்தம் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து எதிர்க்கட்சியின் உறுப்பினர் […]

இந்தியா உலகம் முக்கிய செய்திகள்

பாக்கிஸ்தானில் 9 நகரங்களில் ட்ரோன் தாக்குதல் – பாகிஸ்தானில் மக்கள் அச்சம்

  • May 8, 2025
  • 0 Comments

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலை மத்திய அரசு நடத்தியது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலை வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் லாகூரில் இன்று காலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள வால்டன் விமான தளத்தை குறி வைத்து தாக்குதல் நடந்தது. இதில் ராணுவத்தினர் 4 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே லாகூரை தொடர்ந்து பாகிஸ்தானில் மேலும் 8 நகரங்களில் டிரோன் தாக்குதல்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட நிலையில் உயிரை மாய்த்த மாணவிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் !

  • May 8, 2025
  • 0 Comments

கொழும்பு கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கொட்டாஞ்சேனை விவேகாந்தர் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, ஹின்னி அப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்னாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அத்துடன், கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் அமைந்துள்ள மாணவியின் வீட்டுக்கு முன்னால் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் றெக்டரில்; சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்

  • May 8, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று இரவு தனது உழவு இயந்திரத்தின் கீழே இறங்கி நின்றவாறு திறப்பினை இயங்க செய்துள்ளார். இதன்போது கியர் இயக்கத்தில் இருந்த உழவு இயந்திரம் திடீரென இயங்க ஆரம்பித்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்ததால் அவர்மீது உழவு […]

உள்ளூர்

கொழும்பு மாநகர சபையில் சஜித் அணியே ஆட்சிமைக்கும்- ரஞ்சித் மத்தும பண்டார

  • May 7, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுடன் இணைந்து அமைக்கும் என கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார் புதிய முதல்வர் தமது கட்சியைச் சேர்ந்தவரே நியமிக்கப்படுவார் என அவர் மேலுமி; தெரிவித்துள்ளார் ஆளும் தரப்பு பெரும்பான்மையைப் பெறாத, பிற உள்ளூராட்சி சபைகளில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும […]

உலகம் கனடா

கனடா விற்பனை செய்யப்படமாட்டாதென அமெரிக்க ஜனாதிபதியிடம் கனடா பிரதமர் நேரடியாக தெரிவித்துள்ளார்

  • May 7, 2025
  • 0 Comments

தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் கனடா பிரதமரான மார்க் கார்னி சந்தித்தார் அப்போதும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இனைப்பது குறித்தே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசிக்கொண்டிருந்தார் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதால் கனடாவுக்கு வரி விலக்கு, பாதுகாப்பு என பல நன்மைகள் கிடைக்கும் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கனடா பிரதமரான மார்க் கார்னி, அவர் பேசி முடித்ததும், சில இடங்கள் விற்பனைக்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மக்களால் நிராகரிக்கப்பட்ட கடசிகளுடன் கூட்டணி இல்லை- ஜே.வி.பி

  • May 7, 2025
  • 0 Comments

மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணியை அமைத்து, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தை தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளது. தனி ஒரு கட்சியாக தேசிய மக்கள் சக்தி தெளிவான மற்றும் முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது. இது சிறப்பு வாய்ந்தது. அதிகாரங்களை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 323 கிலோ கேரளா கஞ்சாவுடன் 3வர் கைது கைது

  • May 7, 2025
  • 0 Comments

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரை கடற்படையினர் நேற்று (06-05)இரவு கைது செய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 கிலோ கேரள கஞ்சாவுடன் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியையும், மற்றைய இருவர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உள்ளூர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்தது

  • May 6, 2025
  • 0 Comments

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு 13,759 வாக்குச் சாவடிகளில் ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்துள்ளது அதன்படி இந்த முறை, 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 75,589 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், இதில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டிருந்தன அதன்படி, இந்தத் தேர்தலில் 8,287 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வாக்குப் […]

உள்ளூர்

ஊழலை ஒழிக்க உறுதிமொழி – இன நல்லிணக்கத்துக்கும் அரசு உறுதிபூர்வம்: சபாநாயகர்

  • May 5, 2025
  • 0 Comments

இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் புதிய அரசாங்கம் முழுமையான உறுதியுடன் செயற்படுவதாகவும், இன மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைகளை ஏற்படுத்தும் முயற்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ஊழலை ஒழிக்கும் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வகையான கருத்துகளை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் அவர்களை கடந்த (02) ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்து பேசியபோது […]