உள்ளூர் முக்கிய செய்திகள்

40 பாடசாலைகளில் சேகரித்த தகவலின்படி, 9.1 வீதமான மாணவர்கள் உயிரை மாய்த்துச் கொண்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

  • May 5, 2025
  • 0 Comments

உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு சமூகம் பொறுப்புக் கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர், கல்வி அமைச்சும் சம்பந்தப்பட்ட பாடசாலையும் இந்த சம்பவத்தில் நீதியான முறையில் செயல்பட்டிருந்தால், இவ்வாறான சம்பவம் நிகழாது எனக் கூறினார். ஜோசப் ஸ்டாலின், ‘அம்ஷிகாவின் மரணத்தில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்’ என்று அறிவித்துள்ளார். மேலும், ‘அந்த மாணவியின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு இத்தகைய சம்பவம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வியட்நாமையும் இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்

  • May 5, 2025
  • 0 Comments

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் வியட்நாமில் உள்ள வின்குருப் குழுமத்தின் உயர் நிர்வாகத்தைச் சந்தித்து கலந்துரையாடினார். வின்குருப் குழுமத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், இலங்கையில் ஆதன வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு வின்குருப் குழுமத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். வின்குருப் நிறுவனத்தின் வெற்றி மற்றும் பல்வேறு உலகளாவிய வர்த்தகநாமங்களின் உருவாக்கத்திற்கும் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கையில் முதலீட்டிற்கு நெகிழ்வான […]

உள்ளூர்

வவுனியாவில் 154 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிக்கள்; அனுப்பிவைக்கப்பட்டது

  • May 5, 2025
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்டச்செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர்

நல்லை ஆதீன குருமுதல்வர் பரிபூரணம் அடைந்தார்

  • May 2, 2025
  • 0 Comments

இயற்கையெய்திய நல்லை ஆதீன குருமுதல்வருக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர் பரிபூரணம் அடைந்த நல்லை ஆதீன சுவாமியின் புகழுடல் இன்று காலை 6.15 அளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டுவரப்பட்டது யாழ்ப்பாணத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிற்பகல் 5 மணி அளவில் பரிபூரணத்துக்குரிய கிரியைகள் ஆதீனத்தில் நடைபெற்று செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.      

உள்ளூர்

பாம்புடன் சமைத்த உணவை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்

  • May 2, 2025
  • 0 Comments

பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பாம்பு ஒன்று இருந்த நிலையில், அந்த உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. சமையல்காரர் உயிரிழந்த பாம்பை ஒதுக்கிவிட்டு மதிய உணவை பரிமாறியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கிழக்கு இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மொகாமா நகரில் சுமார் 500 குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டதாக […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசு தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டுகின்றதென சஜித் பிரேமதாச மேதின குற்றச்சாட்டு

  • May 1, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எட்டிய இணக்கப்பாட்டுக்கமைய ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதியை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த கொள்கைக்கு பின்னால் சென்று தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டும் திட்டங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார். தொழிலாளர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி என்றும் பாடுபடும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். தலவாக்கலையில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது […]

உள்ளூர்

அப்பாவியான பிள்ளையானை சிறையில் வைத்திருப்பது கொடுமை என கருணா தெரிவித்துள்ளார்

  • May 1, 2025
  • 0 Comments

பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சினையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தார். அவர் அப்போது நிரபராதி என வெளியே வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது? அது போன்றதொரு விடயம்தான் தற்போதும் அவருக்கு நடந்துள்ளது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழல்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள் என முன்னாள் பிரதியமைச்சரும் தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய 6 பேர் கைது

  • May 1, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொல்புரம் பகுதியில் தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய ரதான சந்தேக நபர் இன்று வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை […]

உலகம்

உக்ரைன் போரில் ரஷியாவுடன் கைகோர்த்துள்ள வட கொரியாவுக்கு புட்டின் நன்றி தெரிவிப்பு

  • April 28, 2025
  • 0 Comments

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது. அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சண்டையில் ரஷியா, வடகொரியா வீரர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புகார் கூறினார். இந்த […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியா கணவன் மனைவி கொலை சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

  • April 28, 2025
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாஸ் உத்தரவிட்டார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 6 […]