தேவாலயங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களின் பாதுகாப்பபை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அறிவுறுத்தியுள்ளார். நேற்று (17-04) நடைபெற்ற விஷேட கூட்டத்தின் போதே இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்கும் […]
