இந்தியா முக்கிய செய்திகள்

வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது!

  • April 15, 2025
  • 0 Comments

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப். 14) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ‘ஆதிதிராவிடர்களுக்கு நலத்திட்ட உதவி செய்வதோடு நம்முடைய அரசினுடைய கடமை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. சுயமரியாதை சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்று இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். நம்முடைய பாதையும், பயணமும் மிக நீண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும், […]

இந்தியா முக்கிய செய்திகள்

தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

  • April 15, 2025
  • 0 Comments

அவருடைய வாழ்த்துச் செய்தியில், ‘மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துகள்! இந்தப் புத்தாண்டு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசிர்வதிக்கப்படட்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். இதையும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 127 முறைப்பாடுகள் பதிவு!

  • April 15, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 159 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 127 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 32 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.                                         […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

எதிர்கட்சி தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

  • April 14, 2025
  • 0 Comments

‘துக்கம் கண்ணீர் இல்லாமல் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த புத்தாண்டுக்காக ஒன்றிணைவோம் என தமிழ், சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையர்களின் சிறப்பான கலாசார விழாவான சிங்கள – தமிழ் புத்தாண்டுக்காக எமது நாட்டின் அன்பான மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சூரியன் மீன ராசியிலிருந்து […]

உள்ளூர்

விவசாய காணி பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதி

  • April 13, 2025
  • 0 Comments

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அக்கரைப்பற்று பகுதியில் நேற்று முன்தினம் (11-04) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தோல்வியுற்ற அரசியல் தரப்பினர் மக்களிடம் பிளவை ஏற்படுத்துவதற்கு விளைகின்றனர். கடந்த காலங்களில் திகன, அக்குரணை, அளுத்கம உள்ளிட்ட பகுதிகளில் முரண்பாடு ஏற்பட்டதுடன் பல வழிபாட்டு ஸ்தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் எதிர்வரும் காலங்களில் மீண்டும் அவ்வாறு இடம்பெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என உறுதியளிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, […]

உள்ளூர்

மனிதப் படுகொலைக்காக ரணிலுக்கு வயது போனாலும் தண்டனை வழங்கப்படும். ஜேவிபி அரசு

  • April 13, 2025
  • 0 Comments

தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது தண்டனை வழங்குவோம் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் […]

உள்ளூர்

வரி தொடர்பில் அமெரிக்காவுடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையில் நடைபெறுகின்றது- தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

  • April 13, 2025
  • 0 Comments

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை குறித்து விரிவாக பேசப்பட்டது. பல யோசனைகளை முன்வைத்துள்ளனர். அவற்றை முழுமையாக பரசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 44 சதவீத பரஸ்பர தீர்வை வரி குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அமெரிக்காவின் வர்த்தக துறை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சஜித்தை டெல்லிக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்துள்ளார்

  • April 12, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாலியல் துஸ்பிரயோகம் கிளிநொச்சி பொலிஸாரின் கேவலமான செயல்.

  • April 12, 2025
  • 0 Comments

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார். சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். வந்த பிரதமர் தேர்தல் சட்டங்களையும் மீறி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய பக்தர்களையும் குழப்பியதாக சிறிகாந்தா குற்றச்சாட்டு

  • April 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தேர்தல் சட்டம் அமுலில் இருக்கிறது. தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறு தேர்தல் திணைக்களம் சகல கட்சிகள் சுயேச்சை குழுக்களுக்கு […]