உள்ளூர்

பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கையொப்பமிட்டுள்ளார்

  • April 11, 2025
  • 0 Comments

பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு நேற்று (10-04) பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து வாக்கெடுப்பு இன்றி இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025ஆம் […]

உள்ளூர்

ஈஸ்டர் தாக்குதல் தாரிகளை பிள்ளையான அம்பலப்படுத்தியுள்ளார் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

  • April 11, 2025
  • 0 Comments

சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (10-03) கருத்து தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; எந்த ஒரு குற்றச்செயல்களையும் எமது அரசாங்கம் மறைக்கபோவதில்லை. அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில […]

உள்ளூர்

ஜனாதிபதி இன்று அவசரமாக சர்வகட்சி தலைவர்களை சந்திக்கின்றார்

  • April 10, 2025
  • 0 Comments

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி தொடர்பாக இன்று அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான ஒப்புதலைத் தாம் வழங்கி இருப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வாறான ஒரு சர்வகட்சி கூட்டத்தை நடத்துமாறு நேற்று காலை எதிரணியைச் சேர்ந்த 12 கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கள்ள மணல் கடத்திய டிப்பர் கவுண்டது நல்லுரான் சந்நிதியில் , அதிகாலையில் சம்பவம்

  • April 9, 2025
  • 0 Comments

யாழ் நல்லூரில் இன்று அதிகாலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளான மணல் ஏற்றிவந்த டிப்பர். பொலிஸார் நிறுத்த சொன்னதும் நிறுத்தாமல் வேகமாக சென்றதல் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமே இவ்வாறு யாழ்ப்பாணம் நல்லூரடியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

உள்ளூர் முக்கிய செய்திகள்

தென்னக்கோனை பதவி நீக்க 151 வாக்குகள் ஒருவரும் எதிர்க்கவில்லை

  • April 9, 2025
  • 0 Comments

இலங்கை பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நேற்று (08-04) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று மாலை இடம்பெற்றதுடன், இதில் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 151வாக்குகள் அளிக்கப்பட்டன. அதேவேளை இதற்கு எதிராக எந்த வாக்கும் அளிக்கப்படவில்லை. எதிராக எந்த வாக்கும் அளிக்கப்படவில்லை பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் ஆளும் கட்சி பாராளுமன்ற […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மாடுகள் கடத்தும் மஸ்தான் எம்.பி. வவுனியாவில் சம்பவம்

  • April 9, 2025
  • 0 Comments

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 மாடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (08-04) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், ஒரு லொறியை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குறித்த லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி 20 மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டது. லொறியில் இருந்த மூவரையும் கைது செய்த பொலிஸார், 20 மாடுகளையும் பொலிஸ் நிலையத்திற்கு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

 வவுனியாவில் அரசினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில்; நடவடிக்கை எடுக்க வேண்டும் – சத்தியலிங்கம் எம்பி

  • April 9, 2025
  • 0 Comments

2010 – 2011 காலப்பகுதியில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின் போது சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக வழங்கப்பட்ட பதில் காணிகள் காட்டுப்பகுதியை அண்மித்துள்ளதாக உள்ளது. அந்த மக்கள் காட்டு யானைத் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (08-04) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் அமைச்சிடம் கேள்வியெழுப்பி […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கஞ்சாவின் ஊசலாட்டம் உச்சம்,யாழ்ப்பாணத்தில் 12 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • April 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (8-04) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன. அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர். […]

உள்ளூர்

குருணாகல், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ : நால்வர் உயிரிழப்பு,

  • April 8, 2025
  • 0 Comments

குருணாகல், வெஹெகர சந்திப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த தீ பரவலில் சிக்கி மேலும் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிவு இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் குருணாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை

  • April 7, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றுஇடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மனு எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுக்கள் மீதான எதிர்ப்புகளை மே […]