முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியில் ஆஜர்!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜராகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
