உள்ளூர்

நித்தியானந்தா சுவாமிகள் இறந்துவிட்டார்

  • April 2, 2025
  • 0 Comments

நித்தியானந்தா இறந்துவிட்டதாக வெளியான காணொளி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நித்தியானந்தாவின் சகோதரியின் மகனே நித்தியானந்தா இறந்துவிட்டதாக காணொளியை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த காணொளி வெளியாகியதையடுத்து அவரை பின்பற்றும் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும்,அவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நித்தியானந்தாவின் சகோதரி மகன், நித்தியானந்தா ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் காணொளி ஒன்றில் தெரிவித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். வடமராட்சி கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் எல்லைக்கட்களை நிறுவியுள்ளனர்

  • April 1, 2025
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தங்கள் பிரதேசத்தில் வளங்கள் சூறையாடப்படுவதாகவும் அது தொடர்பாக எந்த தகவல்கள் தெரிந்தாலும் தமக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் எனவும் வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர் இதுதொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமது எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தமது அனுமதியுடன் கட்டடங்கள் அமைப்பதற்கு தாம் அனுமதி கொடுப்பதாகவும் குறிப்பாக மருதங்கேணி பருத்தித்துறை வீதியின் ஆற்றங்கரை பக்கம் தாம் எந்த வித அனுமதியும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

  • April 1, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை வரை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில்; உருகுலைந்த நிலையில் ஆணா பெண்ணா என்று அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு!

  • April 1, 2025
  • 0 Comments

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று  காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆணா பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் இருந்து ஆண்கள் அணியும் மேல் ஆடை ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் யாரென்பதை வெளிப்படுத்த ஜனாதிபதி நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?- உதய கம்மன்பில

  • April 1, 2025
  • 0 Comments

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே ஏப்ரல் 21க்கு முன்னர் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்க்க வேண்டுமா என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவை தாக்க தயாராகும் ஈரான்!

  • April 1, 2025
  • 0 Comments

டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் குறித்த செய்தியை வெளியிட்டு உள்ளது. அணுஆயுத உற்பத்தியில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை அந்நாடு மறுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க புதிய ஒப்பந்தத்தைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஈரான் அணு ஆயுதம் […]

முக்கிய செய்திகள்

13 நீதிமன்றங்களில் 47 வழக்குகள் 20 பிடிவிறாந்துகள் 53 வயதுப் பெண் கைது

  • March 31, 2025
  • 0 Comments

நாட்டில் உள்ள 13 நீதிமன்றங்களில் 47 இற்கும் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 53 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு பகுதியிலுள்ள மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் மீது கேகாலை, அவிசாவளை, பெல்மதுள்ளை, அங்குணுகொலபெலஸ்ஸ, மஹர, கொழும்பு மற்றும் காலி ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரை கைது செய்வதற்கான 20 பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக […]

முக்கிய செய்திகள்

பலஸ்தீனத்துக்கு ஆதரவாக கிண்ணியாவில்; அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டம்

  • March 31, 2025
  • 0 Comments

நோன்பு பெருநாள் தினமாகிய இன்று அல் அக்ஸா கல்லூரியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையினை தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று இடம் பெற்றது. இஸ்ரேலுக்கு எதிரான இக் கண்டணப் பேரணியில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல கோசங்களையும் எழுப்பியிருந்ததுடன் இதனை திருகோணமலை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளன செயலாளர் எம்.எம்.மஹ்தி ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது பலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் சர்வதிகாரம் எழிற்சி பெற்று வருகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

  • March 31, 2025
  • 0 Comments

நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகளையும் பதில்களையும் வழங்க முடியாத, வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே இருப்பதாக 220 இலட்சம் மக்களுக்கும் நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வருகிறது. மறுபுறம் ஜனநாயகமும் வீழ்ச்சியடைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். குண்டசாலை தேர்தல் தொகுதியில் நேற்று (30-03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அவர், நாடு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கஞ்சாவாக மாறிய மன்னார் மாவட்டம் மீண்டும் 18 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா பொலிஸாரால் மீட்பு

  • March 30, 2025
  • 0 Comments

தலைமன்னார் ஊர்மனை பகுதியில் உள்ள காட்டு பகுதியில்18 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகள் நேற்று சனிக்கிழமை (29) மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து தலைமன்னார் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் தலைமன்னார் ஊர்மனை பகுதியில் கேரள கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 18 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 85 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா பொதிகள் […]