உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கு இராணுவத் தளபதி விஜயம் செய்துள்ளார்

  • March 30, 2025
  • 0 Comments

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி சர்வ மத தலங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மதத் தலைவர்களுடன் சந்தித்து கலந்துரையாடினார். வரணி மத்திய கல்லூரியில் மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்து கொண்டார். மேலும் கொடிகாமம் தெற்கில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடும் பயனாளி ஒருவரிடம் கையளிக்கப்பட்டது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதியை, யாழ் பாதுகாப்புப் […]

உள்ளூர்

உள்ளூராட்சி தேர்தல் முறைப்பாடுகள் 180 பதிவாகிய நிலையில் 133 க்கு தீர்வு காணப்பட்டுள்ளது

  • March 30, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 180 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 179 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடுகளில் 133 முறைப்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், ஏனைய […]

உள்ளூர்

விடுதலை புலிகளின் ஆதரவாளனாக விமர்சித்த போதும் நாட்டிற்கு எதிரான தீர்மானங்களை எடுக்கவில்லை -ரணில் விக்கிரமசிங்க

  • March 30, 2025
  • 0 Comments

இலங்கை பாதுகாப்பு படைகளின் முன்னாள் தளபதிகள் மூவருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள புதிய தீர்மானங்கள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கு சுயாதீனமான ஆணைக்கழு ஒன்றை ஸ்தாபிக்க […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரச சொத்துக்கள் பயன்படுத்தினால் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை – பெப்ரல் எச்சரிக்கை

  • March 30, 2025
  • 0 Comments

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். மாறாக ஏதேனுமொரு தரப்பினர் தேர்தல் சட்டங்களுக்கெதிராக செயற்பட்டால் அவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கொழும்பில் நேற்று (29-03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த தேர்தல்களைப் போன்று இம்முறைத் தேர்தலிலும் அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் […]

உலகம்

மியான்மர் பூமியதிர்ச்சியினால் பலி எண்ணிக்கை 1,600-ஐ கடந்தது

  • March 30, 2025
  • 0 Comments

மியான்மர் நாட்டின் மண்டாலே நகரருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்றுச் சிறப்புமிக்க துறவிகளுக்கான மடாலயமும் இதனால் பாதிக்கப்பட்டது. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1644 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலரது நிலைமை […]

உள்ளூர்

எதிர்க்கட்சியிலிருந்த போது போராட்டங்களையும் முன்னெடுத்தவர்கள் ஆட்சிக்கு வந்ததும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கின்றார்கள்- சஜித் பிரேமதாஸ

  • March 30, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சியில் இருந்த போது போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்த இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் போராட்டங்களை விரட்டியடித்து தாக்க ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்நாட்டு மக்கள் தமது ஆணையால் ஜனாதிபதியை நியமித்தும், 2ஃ3 பாராளுமன்ற அதிகாரத்தையும் வழங்கி தமது […]

உலகம் வணிகம்

உலகின் பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை எலான் மஸ்க் அவரே அவருக்கு விற்றுள்ளார்

  • March 29, 2025
  • 0 Comments

உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். டிவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்துள்ளார். அதாவது எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான ஓ யுஐ நிறுவனத்துக்கு […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் ஸ்தலத்தில் பலி மற்றொரு இளைஞன் படுகாயம்

  • March 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாமென யாழ். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

  • March 29, 2025
  • 0 Comments

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவானது அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது. எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்தியப் பிரதமர் மோடி தமிழரசுக் கட்சியை சந்திப்பாரா? பழைய பஞ்சாக்கத்துடன் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்

  • March 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நேற்று (28-03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கை தமிழரசு கட்சியினர் அவரை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது. அந்த சந்திப்பிலே முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல […]