உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ச இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

  • July 29, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று ( ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாடுகளுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக அவர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை நேற்றைய தினம் (28) மீண்டும் அழைக்கப்பட்டபோது நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மாலைத்தீவு விஜயத்தை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் பட்டப்பகலில் முகமூடியுடன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் தங்கச்சங்கிலியுடன் தப்பியோட்டம்

  • July 24, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருங்கன் வீதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் முகமூடியுடன் ஒருவர் புகுந்து கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியை வீட்டில் தனிமையில் இருந்த வேளை, வீட்டின் பின்புற வேலியின் வழியாக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது. திருடன், ஆசிரியையின் கைகளில் அணிந்திருந்த வளையல்களையும் பறிக்க முயன்றுள்ள […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலுக்கு பரப்புவதற்கு மணல் இல்லை.

  • July 24, 2025
  • 0 Comments

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு மணல் வழங்க இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு மணல் வழங்க இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சரித்திரப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, அடியவர்களின் நலனுக்காக வீதிகளில் மணல் பரப்புவது வழமையாகும் என கூறியுள்ளார். ஆனால், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து முற்றிலுமாக தீக்கிரை ஒருவர் காயம்

  • July 19, 2025
  • 0 Comments

இந்த சம்பவம் முசைலயவ ஆயடயமா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18-07) காலை இடம்பெற்றது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். விபத்து நேரத்தின் போது பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ளனர். தீ பரவிய வேளையில், பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், பயணிகள் ஜன்னல்களை உடைத்து வெளியேறியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. விபத்துடன் தொடர்புடைய நிறுவனம் செயற்பாடுகளை […]

உள்ளூர்

வடக்கில் 33 வைத்தியசாலைகள் செவிலியர்களின்றி இயங்குகுவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்

  • July 14, 2025
  • 0 Comments

வடமாகாணத்தில் உள்ள 33 முதன்மை வைத்தியசாலைகள் ஒரே ஒரு செவிலியருமின்றி இயங்கிவருகின்றன என சுகாதார அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிச்ஸா தெரிவித்தார். நாகதீப வைத்தியசாலையின் திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், இவ்வகை வைத்தியசாலைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், அவற்றை காலப்போக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், அடுத்த இரண்டு மாதங்களில் 300 புதிய செவிலியர்கள் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர். மேலும், அதனைத் […]

உள்ளூர்

கடத்தி வரப்பட்ட பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது!

  • June 29, 2025
  • 0 Comments

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த படகில் இருந்த மூவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதோடு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் […]

உள்ளூர்

கச்சத்தீவு மீட்பு என்பது தமிழக அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதி மட்டுமே!

  • June 29, 2025
  • 0 Comments

கச்சத்தீவு இலங்கைக்கு இராஜதந்திர ரீதியாக சொந்தமானது என்பதால், அது எந்த வகையிலும் வேறு எந்த தரப்பினருக்கும் ஒப்படைக்கப்படாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் காலங்களில் தமிழக அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும், அரசியல் வாக்குறுதியாகவும் மக்களை சூடேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் தேர்தல் வாக்குறுதியாகவே கச்சத்தீவு மீட்பு என்ற விடயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் இந்திய மீனவர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக, அந்தப் பகுதியில் […]

உள்ளூர்

செம்மணியில் இதுவரை 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!

  • June 29, 2025
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 26ஆம் திகதி ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது புதைகுழி ஒன்றில் இருந்து மனித எலும்பு கூட்டு தொகுதிகளும், பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை, செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே […]

உலகம்

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

  • June 27, 2025
  • 0 Comments

  ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை […]

உள்ளூர்

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்

  • June 27, 2025
  • 0 Comments

இந்த விஜயத்தின் போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்தித்ததுடன், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண […]