உலகம்

ஹமாஸ் அமைப்பபை வெளியேறக் கோரி பாலஸ்தீன மக்கள் வீதிகளில் இரங்கி போராட்டம்

  • March 27, 2025
  • 0 Comments

கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர். இரத்னனை தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஐநா தெரிவிக்கிறது. காசா நகரம் முற்றாக […]

இந்தியா முக்கிய செய்திகள்

காதலியையும் காதலியின் தந்தையையும் சுட்டுக்கொன்ற இளைஞன் தற்கொலை

  • March 27, 2025
  • 0 Comments

பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள ஆரா தொடரூந்து ; நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான அமன் குமார் முதலில் அப்பெண்ணையும் அதன் பின் அவளது தந்தையையும் தொடரூந்து நிலையத்தில் நடைமேடைகளுக்குச் செல்லும் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார். பின் அதே இடத்திலேயே தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பத்தால் அங்கிருந்த பயணிகள் அதிரிச்சியில் மூழ்கினர். ஆர்பிஎப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு […]

முக்கிய செய்திகள்

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை வெற்றிக்கொண்டது

  • March 27, 2025
  • 0 Comments

நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரின் ; 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ், அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது. துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 29 ஓட்டங்களும் ரியான் பராக் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைதீவில் பிரதேச செயலாளருக்கு அச்சுருத்தல் விடுத்துள்ள கசிப்பு உற்பத்தியாளர்கள், செய்வதறியாது அரச நிர்வாகம்

  • March 27, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக 239பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், வெலிஓயா பிரதேசசெயலாளர் இதுதொடர்பில் தரவுகளைத் திரட்டும்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளானமையால், இதுதொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கமுடியவில்லையெனவும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு க் குழுக்கூட்டத்தில் 26.03.2025 இன்று சுட்டிக்காட்டப்பட்டது. இந் நிலையில் சட்டவிரோத மது மற்றும், போதைப்பொருட்களைத் தடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை தேவை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். […]

உள்ளூர்

இலங்கை இந்திய அரசுகள் பேச வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார்.

  • March 26, 2025
  • 0 Comments

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார். இலங்கை – இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அன்னராசா இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2016ஆம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அனுராதபுரத்தில் 69 வயதுடைய விகாராதிபதி வெட்டிக்கொலை

  • March 26, 2025
  • 0 Comments

அநுராதபுரம் எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியிலுள்ள விகாரையொன்றினுள் கூரிய ஆயுதம் ஒன்றினால் விகாராதிபதி ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய எப்பாவல பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று (25-03) எப்பாவல பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த எப்பாவல பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக வேண்டி பல கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எப்பாவல கிரலோகம […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வேட்பு மனு நிராகரிக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வாசலில் மணியும் மானும்

  • March 25, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் தவறு உள்ளதாக கூறி அந்த பெண் வேட்பாளரை பட்டியலில் இருந்து நீக்கியமையால் , தேவையான பெண் பிரதிநிதித்துவம் இல்லை என மாநகர சபைக்கான வேட்பு மனுவை தேர்தல்கள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது. வேட்பு மனுவில் தேவையான […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

  • March 25, 2025
  • 0 Comments

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். தேசபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்

அர்ச்சுனா எம்.பி தான் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை குழப்பியதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

  • March 25, 2025
  • 0 Comments

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார் என யாழ். ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இன்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வியாழேந்திரனை கைது செய்தது

  • March 25, 2025
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.