உள்ளூர்

வவுனியா சிறைச்சாலையிருந்த கைதி லாவகமாக தப்பினார்- பொலிஸார் தேடுதல்

  • March 22, 2025
  • 0 Comments

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். தப்பியோடிய கைதியை கைது செய்வது தொடர்பான நடவடிக்கைகளை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர்

மன்னாரில் விபத்து ஒருவர் பலி மூவர் காயம் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவில் அனுமதி

  • March 22, 2025
  • 0 Comments

மன்னார் – பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அதேவேளை மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த லொறி வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லொறியில் 4 நபர்கள் பயணித்துள்ளனர். இதன் போது, ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

  • March 22, 2025
  • 0 Comments

யாழ். சேந்தாங்குளம் கடலில் நேற்று (21-03) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த 20 வயதுடைய பி.சாருஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக நேற்று மதியம் இளவாலை – சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர். கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் சாருஜன் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் […]

உள்ளூர்

யாழில் மைத்துனன் தாக்கியதால் மச்சான் உயிர்மாய்ப்பு

  • March 22, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் அளவெட்டி – விசவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே தவறான முடிவெடுத்து நேற்று (21-03-2025 ) உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அளவெட்டி – விசவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபர் கடந்த 18ஆம் திகதி அவரது மைத்துனருடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இதன்போது குறித்த நபர் தனது மைத்துனரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியவர், வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டுள்ள நிலையில், […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் கஞ்சா பொலிஸாரால் மீட்பு

  • March 22, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்ட போதும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது யாழில் நீண்ட நாட்களுக்குப் […]

உள்ளூர்

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு 114 பெரும்பான்மை வாக்குகளால்  நிறைவேறியது

  • March 21, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு திருத்தங்களுடன் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 114 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

உள்ளூர்

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

  • March 21, 2025
  • 0 Comments

பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய முகவரிகளுக்கான பொதிகள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தை வந்தடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 20 பொதிகள் வந்துள்ளன. அவை உரிமை கோரப்படாததால், பொதிகளை பரிசோதிக்க 19 ஆம் திகதி தபால் மா அதிபரிடம் அனுமதி பெறப்பட்டது. பரிசோதனையின் போது 14 பொதிகளில் 272 கிராம் கஞ்சா போதைப் பொருளும், 2,049 […]

உள்ளூர்

சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக உள்ளது அநுர அரசென்கிறார் சஜித் பிரேமதாச

  • March 21, 2025
  • 0 Comments

கடந்த அரசாங்கம் உருவாக்கிய நாட்டையும் நாட்டு மக்களையும் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும், சாதாரண மக்களின் தோள் மீது சுமையைச் சுமத்தி மக்களை பழிவாங்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கையால் மக்கள் சழரமத்தை எதிர்கொள்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார் இரு தரப்பு கடன் உடன்படிக்கைக்கும், சர்வதேச பிணைமுறி தரகர்களுடன் உடன்படிக்கைக்கும் சென்று ஐ எம் எப் கூறுகின்ற வசனங்களுக்கு நடனமாடுகின்ற, ஐ எம் எப் இன் கைப்பாவையாக இந்த அரசாங்கம் உருவாகியிருப்பதாக் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார் பாராளுமன்றத்தில் நேற்று […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை படுகொலை செய்த குற்றவாளி சுனில் ரத்நாயக்கவிற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது

  • March 20, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் இன்று வெளிநாட்டு பயணதடையைபயணத்தடை விதித்துள்ளது. மார்ச் 2020 இல் சுனில்ரத்நாயக்கவிற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக […]

உள்ளூர்

வியாழேந்திரனும் பிள்ளையானும் மக்களை மக்களை புதைக்கப்போகின்றார்கள் விமலசேன லவக்குமார் தெரிவித்துள்ளார்

  • March 20, 2025
  • 0 Comments

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான்இ கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபோவார்கள் அல்ல மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடுவதற்கா நேற்று புதன்கிழமை (19) பழைய கச்சேரியில் வேட்புமனுதாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக் கருத்து […]