உள்ளூர் முக்கிய செய்திகள்

வெளிநாட்டு விசாரணை பொறிமுறைக்கு அரசாங்கம் ஏன்? அஞ்சுகின்றது என கஜேந்திரகுமார் கேள்வி

  • March 16, 2025
  • 0 Comments

நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும். அந்த நடவடிக்கை நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டும். மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவ தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு ஆதரவளிக்குமா? என்ற சந்தேகம் காணப்படுகிறது. கடந்த கால அரசாங்கங்களின் போக்கில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டு மென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கச்சத்தீவில் புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்களை ஒளிப்படமெடுத்து அச்சுறுத்தல்

  • March 16, 2025
  • 0 Comments

இது குறித்து மேலும் தெரிஎயவருவதாவது கச்சதீவு முன்னரங்க பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் கச்சதீவுக்குள் செல்ல விசேட அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தினை நோக்கி பயணித்த பொழுது சிவில் உடை தரித்து புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்களை சூழந்து கொண்டு இந்தியாவில் இருந்தா வருகை தந்தீர்கள் ? ட்ரோன் கமரா கொண்டு செல்கிறீர்கள் என விசாரித்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர் அத்துடன் ஊடகவியராளர்களை சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் இலங்கை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கடற்தொழில் அமைச்சரை தமிழ் இளைஞர்கள் சுற்றிவளைத்ததால் பரபரப்பு

  • March 14, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி புனரமைப்பு பணிகளுக்காக கடந்த அரசாங்கம் நிதி ஒதுக்கி இருந்து, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது , மீள அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை தேசிய மக்கள் சக்தியினர் தாம் புதிதாக புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதாக காட்டுகின்றனர் என கூறியே அப்பகுதி இளைஞர்கள் கடற்றொழில் அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பொன்னாலை […]

உலகம் முக்கிய செய்திகள்

திருகோணமலையில் இரண்டு வயோதிப பெண்கள் வெட்டிக்கொலை 15 வயது மாணவி காயம்

  • March 14, 2025
  • 0 Comments

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 68 வயதுடைய பெண் மற்றும் அவரது 74 வயதுடைய சகோதரி ஆகிய இருவருமே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், உயிரிழந்தவர்களில் ஒருவரின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த கொலை சம்பவத்தில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகளை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையின் பெக்கோ டிரெயில் உலகின் சிறந்த சுற்றுலாத் தளமாக தெரிவு

  • March 14, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 சுற்றுலாத் தளங்களின் பட்டியலை ‘டைம்’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ‘பெக்கோ டிரெயில்’ முதலிடம் பிடித்துள்ளது. ‘பெக்கோ டிரெயில்’ என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டின் வழியாக 300 கிலோமீட்டர் ஒரு தொலைதூரப் நடைப்பயணமாகும். இந்த 22 நிலை நடைப்பயணமானது ஆசியாவின் தெற்கில் உள்ள மிகச்சிறந்த சூழலியல் மற்றும் மலைப் பகுதிகள் வழியாக அழைத்துச் செல்லும். நடைப்பயணம் கண்டியில் இருந்து ஆரம்பித்து ஹப்புத்தளை, எல்ல வழியாக நுவரெலியாவுக்குச் செல்கிறது.

உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் 4 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தமிழரசுக்கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

  • March 14, 2025
  • 0 Comments

வவுனியா நகர சபை உட்பட நான்கு சபைகளிலும் போட்டியிட இலங்கை தமிழ் அரசு கட்சி இன்று வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைய, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகர சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

செல்வம் அடைக்கலநான் எம்பியின் புதிய கண்டுபிடிப்பு.

  • March 6, 2025
  • 0 Comments

மீனவர் பிரச்சினையை வைத்துக்கொண்டு தமக்கும் இந்தியாவுக்கும் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த விடயத்தில் சீனா மூக்கை நுழைப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (05-03-2025) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை மீனவர்களுடன் நாங்கள் பேசும் போது, இந்திய ரோலர் […]

உலகம் முக்கிய செய்திகள்

எலான் மஸ்க் கோரிக்கையை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்

  • March 6, 2025
  • 0 Comments

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கின்றனர். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆலோசனையை நிராகரித்துள்ளார். முன்னதாக 2030-ம் ஆண்டு செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அதற்கு முன்பே செயலிழக்க செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்

  • March 6, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா நேற்று இரவு (05- 03-2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாதாள உலக குழு தலைவரான ‘மிதிகம ருவனுக்கு’ விளக்கமறியல் நீடிப்பு

  • March 5, 2025
  • 0 Comments

பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான ‘மிதிகம ருவன்’ என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுல் லங்காபுர இன்று உத்தரவிட்டுள்ளார். ‘மிதிகம ருவன்’ என்பவர் இன்றைய தினம் ஸ்கைப் காணொளி அழைப்பு ஊடாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘மிதிகம ருவன்’ என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் […]