‘மதயானை கூட்டம்’, ‘ராவண கோட்டம்’ படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் காலமானார்
‘மதயானை கூட்டம்’, ‘ராவண கோட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். 1999 முதல் 2000 வரை வெளியான ‘கதை நேரம்’ மற்றும் 56 குறும்படங்கள், ‘ஜூலி கணபதி’ திரைப்படம் போன்றவற்றில் பாலு மகேந்திராவிடம் பணிபுரிந்தார். மேலும் ‘பொல்லாதவன்’, ‘கொடிவீரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவுப் பேருந்து ஏறும் […]