உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தொடரும் சிக்கல்

  • May 26, 2025
  • 0 Comments

உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், தமது கூட்டணி முன்னிலை பெற்றுள்ள சபைகளில் மேயர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது. அதேநேரம், எந்தவொரு தேசிய கட்சி ஆட்சி அமைப்பதற்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு அதிகமான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளது. […]

உள்ளூர்

மாகாணசபைத்தேர்தலை அரசாங்கம் நடத்தாதென சி.வி.விக்னேஸ்வரன் ஆருடம். ஐயோ வடை போச்சே…..

  • May 25, 2025
  • 0 Comments

அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத ;தேர்தல்களின் அடைந்த பின்னடைவை அடுத்து, வெகுவிரைவில் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்பாது எனவும், ஆகவே அதனைத் தொடர்ந்து இழுத்தடிப்புச்செய்து காலதாமதப்படுத்துவதற்கே முற்படும் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை (22-05) வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சு மட்டத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் 2 பட்டதாரி மகள்மாருக்கு திருமணம் நடக்காததால் தந்தை தற்கொலை

  • May 24, 2025
  • 0 Comments

யாழ் – சங்கானையில் பட்டதாரிகளான இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெறவில்லை என மனமுடைந்த தந்தை தவறான முடிவெடுத்து நேற்று (23-05) உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவருக்கு 63 வயதாகும் இம் மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மின்சார சபையின் அசமந்தத்தால் மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை பலி

  • May 24, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (23-05) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார். குடுப்பஸ்தர் நேற்று பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டியுள்ளார். இதன்போது நீண்டு வளர்ந்திருந்த தடி மின்சார கம்பி மீது தொடுகை […]

உள்ளூர்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு

  • May 24, 2025
  • 0 Comments

தொழில்நுட்ப ரீதியாக மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சுசார் மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (23-05) நடைபெற்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு வேளையின் போது மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் […]

உள்ளூர்

வட, கிழக்கிலுள்ள மக்களின் நிலங்களை கையகப்படுத்தும திட்டம் அரசிடம் இல்லையென்கிறார் பிரதமர்

  • May 24, 2025
  • 0 Comments

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறை 1 இல் நேற்று (23-05) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார். இதுவரை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசு ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. செக் வைத்தது ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல்

  • May 23, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் வலியுறுத்தப்பட்டுள்ள ஆட்சியியல் நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கான ‘அரசாங்கத்தின் செயற்திட்ட ட்ரக்கர்’ எனும் சுயாதீன இணையவழித்தளத்தை ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையின் மறுசீரமைப்பு செயன்முறையில் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும் நோக்கிலான ஓர் நடவடிக்கையாக இந்த கண்காணிப்பான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஊழல், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மற்றும் பொறுப்பற்ற ஆட்சிமுறை ஆகியவற்றை முடிவுக்குக்கொண்டுவருமாறுகோரி உருவான ‘அரகலய’ எனும் மாபெரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் இடம்பெற்று […]

உள்ளூர்

யாழில் 30 வயது யுவதி திடீரென மரணம். அதிர்ச்சியில் குடும்பத்தினர்

  • May 23, 2025
  • 0 Comments

நேற்று முன்தினமிரவு (21-05 இரவு யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி புதன்கிழமை (21-05) இரவு சாப்பிட்டுவிட்டு இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் முச்சக்கர வண்டி மூலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் இடைவழியில் உயிரிழந்துள்ளார். பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் […]

உள்ளூர்

அமைச்சர் சந்திரசேகர் அடித்தார் அந்தர் பெல்டி பிரபாகரனுக்கு சிலைவைப்பதாக தெரிவிக்கவில்லையாம்

  • May 23, 2025
  • 0 Comments

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (22-05) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷண ராஜகருணா எம்பி தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார். பிரபாகரனுக்கு சிலை வைப்பது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தனியார் துறைகள் வளர்ச்சிக்கு உலக வங்கி குழுவிடம் யாழ். அரசாங்க அதிபர் கோரிக்கை

  • May 22, 2025
  • 0 Comments

தனியார் துறைகளின் வளர்ச்சி ஊடாக இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், உடனடி நடவடிக்கைகள் எடுக்க உலக வங்கி குழுவிடம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை, கடந்த புதன்கிழமை (21 மே) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின்போது வெளியிடப்பட்டது. இதில் உலக வங்கி குழுவினர், மாவட்ட அரசாங்க அதிபருடன் நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். முக்கிய அம்சங்கள்: தொழில் வாய்ப்புகள்: தனியார் முதலீடுகள் […]