உள்ளூர்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி வெல்லுமென்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

  • March 17, 2025
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல், முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் நேற்று (16-03-2025) இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் […]

முக்கிய செய்திகள்

வடக்கு மாகாணம் உட்பட பல மாகாங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

  • March 16, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அநுராதபுர மாவட்டத்திலும் இன்றுஇடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

வெளிநாட்டு விசாரணை பொறிமுறைக்கு அரசாங்கம் ஏன்? அஞ்சுகின்றது என கஜேந்திரகுமார் கேள்வி

  • March 16, 2025
  • 0 Comments

நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும். அந்த நடவடிக்கை நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டும். மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவ தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு ஆதரவளிக்குமா? என்ற சந்தேகம் காணப்படுகிறது. கடந்த கால அரசாங்கங்களின் போக்கில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டு மென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்

  • March 6, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா நேற்று இரவு (05- 03-2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

பாதாள உலக குழு தலைவரான ‘மிதிகம ருவனுக்கு’ விளக்கமறியல் நீடிப்பு

  • March 5, 2025
  • 0 Comments

பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான ‘மிதிகம ருவன்’ என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுல் லங்காபுர இன்று உத்தரவிட்டுள்ளார். ‘மிதிகம ருவன்’ என்பவர் இன்றைய தினம் ஸ்கைப் காணொளி அழைப்பு ஊடாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘மிதிகம ருவன்’ என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 79 வயதுடைய தாயொருவர் உயிரிழந்துள்ளார்

  • March 5, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில், மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த வேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 79 வயதுடைய வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வயோதிப பெண், கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவி தொகை பெறுவதற்காக கடந்த மாதம் 17ம் திகதி சென்றுள்ளார். உதவி தொகை பெற்ற பின் நடந்து வீடு திரும்பி கொண்டிருந்த வேளை பெண்ணொருவர், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ் மக்களின் விடயத்தில் அநுர அரசாங்கத்திற்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை- ஜோசப் ஸ்டாலின்

  • March 5, 2025
  • 0 Comments

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசுகளைப் போன்று அனுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். வட மராட்சிக்கு நேற்று (04-03-2025) விஜயம் மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

நீதிமன்ற கொலை சந்தேக நபரான செவ்வந்தி பற்றி தகவல் தருவோருக்கு 12 இலட்சம் சன்மானம்

  • March 5, 2025
  • 0 Comments

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பெண் சந்தேகநபர் தலை மறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கு உண்மையான தகவல்களை பொதுமக்களை வழங்குமாறு கோரி பொலிஸ் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

ஆனையிறவு உப்பளத்தை இளங்குமரன் எம்பி பார்வையிட்டுள்ளார்

  • March 4, 2025
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகிய இடங்களுக்கு நேற்று (03-03-2025) விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தக்கரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் ஆனையிறவு உப்பு உற்பத்தி குறித்த கட்டிடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கைத்தொழில் அமைச்சர் எதிர்வரும் 7ம் திகதி யாழ்ப்பாணம் வருகை தர இருக்கின்றார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

  • March 4, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் வைத்தியர்களினால் நாளை புதன்கிழமை (05) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்தே பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.