முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிய மகஜர் கையளிப்பு

  • February 18, 2025
  • 0 Comments

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய 18000 ஆயிரம் பேர்களின் கையெழுத்துக்களுடன் கூடிய மகஜர் அண்மையில் தயாரிக்கப்பட்டது அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச்சங்கம் சேகரித்த 18,000 ஆயிரம் பேர்களின் கையெழுத்துக்களுடனான மகஜர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது  

முக்கிய செய்திகள்

ரணில் அரசாங்கம்; ஆரம்பித்தவற்றைறே தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்

  • February 18, 2025
  • 0 Comments

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள் சக்தி தொடர்கிறது என்பது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெளிப்பட்டுள்ளது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2015, 2016 மற்றும் 2017 காலப்பகுதியில் செய்வதற்றை 2023, 2024ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பித்தவற்றை முன்னெடுத்து செல்வதை போன்றே இந்த வரவு செலவுத் திட்டத்தை பார்க்கின்றோம். […]

முக்கிய செய்திகள்

ஜேவிபியும் முன்னர் தேர்தலை பிற்போட ஆதரவளித்துள்ள கட்சி தான் என்கிறார் நாமல் ராஜபகஸ

  • February 18, 2025
  • 0 Comments

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு சார்பானவர்களால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடு அரசாங்கத்துக்கு அழகல்ல, தேர்தலை பிற்போடும் பாவச்செயலுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த காலங்களில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்களும் உள்ளோம். இருப்பினும் தேர்தல் நடவடிக்கைகள் சாதாரண தர பரீட்சைக்கு இடையூறாக அமைய கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (17-02-2025) நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார […]

முக்கிய செய்திகள்

இளம் குடும்ப பெண்ணான 3 பிள்ளைகளின் தாய் தலைமறைவு பொலிஸார் வலைவீச்சு

  • February 17, 2025
  • 0 Comments

3 பிள்ளைகளின் தாய் 7 நாட்களாக வீட்டை விட்டுவெளியேறிய நிலையில், வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை (10-02-2025 ) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பெண் தொடர்பில் ஏதாவது அறிந்திருந்தால் உடனடியாக 0767824592, 0753251281 தொலைபேசி இலக்கங்களுக்கு […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஒருவரை கடத்திச் பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது

  • February 17, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (16-02-2025) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் துபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த […]

முக்கிய செய்திகள்

அம்பாறையில் மதுபானசாலைக்கு எதிராக போராடிய மக்களிடம் சென்ற சுமந்திரனுக்கு நல்லசாத்துப்படி

  • February 16, 2025
  • 0 Comments

அம்பாறை – பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியனை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்திய நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், […]

முக்கிய செய்திகள்

இலங்கைத் சமஸ்டி கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் நடைபெறுகின்றது

  • February 16, 2025
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிக் காரியாலயத்தில் தற்போது இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன்,இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். இதன்போது உயிரிழந்த தமிழரதசுக்கட்சி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.      

முக்கிய செய்திகள்

கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் தமிழ் கடத்தல்காரரான விக்னேஸ்வரமும் அவரது மனைவியும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் 

  • February 16, 2025
  • 0 Comments

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் சந்தேகநபர் 30 வயதுடைய புஸ்பராஜ் விக்னேஸ்வரம் என்பவராவார். பல பொலிஸ் நிலையங்களால் விசாரிக்கப்பட்டு வரும் துப்பாக்கிசூட்டு முயற்சி, துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபராவார். சந்தேகநபர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கை காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் கூடவுள்ளது

  • February 16, 2025
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று காலை 10.00 am மணியளவில் நடைபெறவுள்ளது. கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின்போது முதலில் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்படவுள்ளது. குறிப்பாக, வழக்குகளை விரைந்து இணக்கத்துடன் முடித்து வைப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. ஏலவே கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்கு முன்னதாக நடைபெற்ற நிருவாகத்தெரிவுக்கு எதிராக திருகோணமலையில் தாக்கச் செய்யப்பட்ட வழக்கு ஜுன் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த […]

முக்கிய செய்திகள்

மக்களின் அரசாங்கத்தை மக்களே பாதுகாப்பார்கள் எனவே அரசாங்கத்தை வீழ்த்த முடியாதென பிரதமர் தெரிவித்துள்ளார்

  • February 16, 2025
  • 0 Comments

எமது அரசாங்கம் மக்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அதனை அவர்களே பாதுகாக்கின்றனர். எனவே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. அவ்வாறு எவராவது நினைப்பார்களாயின் அது வெறும் கனவு மாத்திரமேயாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரலகங்வில பகுதியில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், இந்த நாட்களில் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன? எமது அரசியல் கொள்கை பிரகடனம் மற்றும் எமது அரசியல் கலாசாரத்துடன் […]