நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் மீண்டும் இயங்குகின்றது
நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09-02-2025) ஏற்பட்ட மின்தடையால் செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்று மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் திருத்தப்பட்டு மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய 3 இயந்திரங்களும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடையால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன. இதன் விளைவாக, தேசிய மின்கட்டமைப்பில் 900 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டது. நிலைமையை முகாமைத்துவம் […]