இஷாரா செவ்வந்தி போல் இருந்ததால் பெண்ணொருவர் கைது
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட யுவதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஷாரா செவ்வந்தி அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் […]