முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர்களை படுகொலைகள் செய்தவர்கள தண்டிக்கப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் கோரிக்கை

  • February 6, 2025
  • 0 Comments

இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர்கள் மீது கொலைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்ட போது திருட்டு மௌனம் காத்திருந்த ஆட்சியாளர்கள் தற்போது லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள போதும் அதே மௌனத்தை பேணப்போகின்றார்களாவென்ற கேள்வி எழுகின்றது. கடந்த நெருக்கடி […]

முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான உயர்நீதமன்றத்தின் தீர்மானம் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை – சபாநாயகர்

  • February 5, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இதுவரையில் தனக்கு கிடைக்கப் பெறவில்லை என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார். உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப் பெறவில்லை என்று சபாநாயகர் அறிவிக்கிறார். இது முற்றிலும் பாரதூரமானது. ஆகவே அமைச்சரவை பேச்சாளர் தனது கருத்தை மீறப்பெற வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் யார் கூறுவதை […]

முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜா என்ற நீண்ட சரித்திரம் சரிந்தது

  • January 31, 2025
  • 0 Comments

மாவை சேனாதிராசா 1942 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ம் திகதி யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரத்தில் பிறந்தார். மாவையண்ண மாவை மாவை சேனாதிராஜா என அவர் அழைக்கப்பட்டாலும் அவரின் இயற் பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா என்பதாகும் ஆகும் இவர் யாழ்ப்பாணத்தில் வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மாவை சேனாதிராஜா 1961 ம் ஆண்டு நமைப்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றி […]

முக்கிய செய்திகள்

கொக்கட்டிச்சோலைப் படுகொலை 38 -ம் ஆண்டு நினைவு நாள்!

  • January 28, 2025
  • 0 Comments

இன்றைய நாள் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளாகும். இலங்கையைப் பொறுத்தவரை சிறுபான்மை இனம் மீதான படுகொலை செய்ததில் கொலையாளிகளுக்கு இதுவரை சர்வதேசம், நீதித்துறை எந்தவிதத்திலும் தண்டித்ததும் இல்லை தமிழர் எப்பொழுதும் மற்றயவர் உரிமைகளை நசுக்குவதில் உடன்பாடற்ற சமூகம் என்பதால் என்னவோ தமிழினத்தை கொலை செய்வதில் மற்றைய இரு இனங்கள் தமிழின கொலையை பார்த்து சந்தோசம் அடைந்தார்கள். 1987ஆம் ஆண்டு பேரினவாத அரசாங்கங்களால் நடைபெற்ற கொலைக்கு தண்டனை வழங்கப்பட்டு இருந்தால் அதன் […]

முக்கிய செய்திகள்

மகிந்தவின் 2வது புத்தா சற்று முன் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

  • January 27, 2025
  • 0 Comments

மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ஸ நேற்று முன்தினம் (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார். இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை மோசடியாக வாங்கியமை தொடர்பில் சந்தேக நபரான யோசித ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ளநிலையிலேயே இன்று காலை சற்று நேரத்திற்கு முன் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் […]

உலகம்

அமெரிக்கா மனித உரிமைகளை மீறி பிரேசில் மக்களை கைவிலங்குடன் நாடு கடத்தியது

  • January 27, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு கிழமை முடிவதற்கு முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் ஜனாதிபதி டிரம்ப்-இன் நடவடிக்கை உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் அவமதிக்கப்பட்டதாக பிரேசில் குற்றம்சாட்டியுள்ளது. நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு இருந்தனர் என்று பிரேசில் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது அவமதிப்பையும் கடந்து, மனித […]

முக்கிய செய்திகள்

பாராளுமன்றத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாடுவதால் இனங்கள் ஐக்கியப்படும்- சபாநாயகர்

  • January 25, 2025
  • 0 Comments

தைப்பொங்கல் பண்டிகை இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன்முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது. இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள், அமைச்சர்கள், மற்றும் தமிழரசுக் கட்சி, ஜேவிபி இன் பராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் முன்மொழிவுக்கு அமைய, சபாநாயகரின் ஆலோசனையின் கீழ், புத்த சாசன, சமய […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

  • January 24, 2025
  • 0 Comments

மாணவர்கள் பழிவாங்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள மாணவர்கள் அதனை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தொடக்கம் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டததை ஆரம்பித்துள்ளனர் 4 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய் விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய் ⁠மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்

  • January 24, 2025
  • 0 Comments

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த தீபாவளி தினத்தன்று மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வரும் நிலையில் கொலை செய்யப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலே கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை […]

முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு பொலிஸ் ஆணைக்குழு நேற்று வகுப்பெடுத்தது

  • January 23, 2025
  • 0 Comments

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. பொலிஸாரின் சில இடமாற்றங்களைச் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கம் கொடுத்துள்ளது […]