உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!

  • January 10, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் மூவர் காயமடைந்துள்ளனர். காத்தான்குடி ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

முக்கிய செய்திகள்

காணாமல்போனோர் அலுவலகத்தை மக்கள் நம்பும் வகையில் மாற்ற வேண்டும் – தேசிய ஒருமைப்பாட்டிற்கான பிரதியமைச்சர்

  • January 10, 2025
  • 0 Comments

காணாமல்போனோர் அலுவலகம் உட்பட தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான பொறிமுறைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கான பிரதியமைச்சர் முனீர்முலாபிர் தெரிவித்துள்ளார். காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்றவற்றை முன்னைய அரசாங்கம் அரசியல் நியமனங்களிற்காக பயன்படுத்தியது என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் தற்போதைய அரசாங்கத்தின் இந்த பொறிமுறைகள் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை உண்மையான நோக்கமாக கொண்டு செயற்படும் என குறிப்பிட்டுள்ளார். அனைத்தும் தற்போது மாறிவிட்டன,பத்துவருடங்களிற்கு முன்னர் காணப்பட்ட நிலை தற்போதில்லை,இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் […]

முக்கிய செய்திகள்

யாழில் விபத்து மோட்டார் 21 வயது இளைஞன் உயிரிழப்பு

  • January 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த வயது 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. […]

முக்கிய செய்திகள்

தமிழ் இளையோருக்கு தலைமத்துவம் பற்றி தெரியாது என ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார்

  • January 8, 2025
  • 0 Comments

வடக்கிலும் கிழக்கிலும் தலைமைத்துவம் என்றால் என்ன பண்பு, பண்பாடு என்றால் என்ன பக்குவம் என்றால் என்ன என்று தெரியாத நிலையில் இன்றைய தலைமுறையினர் வாழ்வதாக ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார் இதனால் பல துன்பங்களை துயரங்களை அனுபவித்து வருகின்றோம் என சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார். அன்னை, சிவத் தமிழ்ச்செல்வி பண்டிதை கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டி ஜனனதினம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் அன்னபூரணி மண்டபத்தில் அதன் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் […]

உள்ளூர்

நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

  • January 7, 2025
  • 0 Comments

நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படிஇ பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துரங்க அபேசிங்கஇ சாணக்கியன் இராசமாணிக்கம்இ கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஹர்கம் ஈல்லெயாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்பு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த நியமனங்கள் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார். இதையும் படியுங்கள்> அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர்                  […]

உள்ளூர்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய எதிர்வு கூறல்!

  • January 7, 2025
  • 0 Comments

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகள் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் […]

உள்ளூர்

மட்டக்களப்பு, மாநகர சபையின் புதிய ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்!!

  • January 2, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக என்.தனஞ்சயன் தனது கடமைகளை நேற்று (01) திகதி பொறுப்பேற்றுக்கொண்டார். மாநகர நகரசபை வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுடன் புதிய ஆணையாளர் என்.தனஞ்சயன் மாநகர சபையின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்.. அதனைத் தொடர்ந்து புதிய ஆணையாளர் என்.தனஞ்சயன் அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் 2025 புதிய வருட கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வகையில் மாநகர சபையின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், […]

உள்ளூர்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது!

  • January 2, 2025
  • 0 Comments

நேற்று (01) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில், விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட உட்பட்ச எண்ணிக்கை ஆகும். மேலும் இதன்போது, போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக சட்டம் அமுல்படுத்தப்பட்ட சாரதிகளின் மொத்த எண்ணிக்கை 7,264 ஆகும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. […]

உள்ளூர்

நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல – இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்!

  • January 1, 2025
  • 0 Comments

சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அநுர குமார திசாநாயக்க இதனை புரிந்து புத்தாண்டில் செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் தெரிவித்தார். யாழில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே சி.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்கனவே இருப்பவர்களுக்கு மட்டும்தான் கட்சி வாய்ப்பு அளிக்கும் என்ற கருத்து இருப்பதால் […]

உள்ளூர்

செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

  • December 27, 2024
  • 0 Comments

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது. செட்டிக்குளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட காணிப் பிரச்சினைகள், சுகாதார வைத்திய சேவை, கல்வி, பொருளாதார அபிவிருத்தி, மேய்ச்சல் தரை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், வருகைதந்த கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், […]