உள்ளூர்

வடக்கில் இந்தியாவும் சீனாவும் முதலீட்டில் போட்டி?

  • December 4, 2024
  • 0 Comments

இந்திய 15 முதலீட்டாளர்கள் 15 பேர் யாழ் வரவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடத்தும் வடமாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நேற்று (03) காலை ஆரம்பமானது . மூன்று நாட்கள் நடைபெறும் வட மாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் […]

உள்ளூர்

இனவாதத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த இடமளியோம் – நலிந்த ஜயதிஸ்ஸ

  • December 3, 2024
  • 0 Comments

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவதைத் தடைசெய்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் […]

உள்ளூர்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்க நியமனம்.

  • December 2, 2024
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெகுஜன ஊடக அமைச்சராகவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் பணியாற்றினார். இதையும் படியுங்கள்> முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அத்துடன், அமைச்சரவை ஊடகப் பேச்சாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கயந்த கருணாதிலக்க 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் […]

உள்ளூர்

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு 

  • December 2, 2024
  • 0 Comments

நிர்வாகத்தில் இடம்பெறும் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதையும் படியுங்கள்>ரணிலும் சஜித்தும் இணைய வேண்டுமென இருதரப்பும் விரும்புகின்றது- முஜிபுர் ரஹ்மான் சாலையில் இடம்பெறும் நிர்வாக ரீதியில் பிரச்சனைகளை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காமையால் தாம் இன்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமையை அடுத்து பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது     https://www.facebook.com/share/p/19Ug2nWjc5/ […]

உள்ளூர்

மீண்டும் வானிலையில் ஏற்பட்ட மாற்றம்.

  • December 2, 2024
  • 0 Comments

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை இல்லாத வானிலை காணப்படும். வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக […]

உள்ளூர்

கிளிநொச்சியில் சீரற்ற வானிலை தொடர்கின்றது

  • November 27, 2024
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி வட்டக்கச்சி பெரியகுளம் பகுதிகளில் வீதிகளை மூடியவாறு வெள்ள நீர் தேங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களுக்கு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.  

உள்ளூர்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறும் குலசிங்கம் திலீபன்.

  • November 26, 2024
  • 0 Comments

முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது, ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். […]

உள்ளூர்

சீனா 1888 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கின்றது

  • November 23, 2024
  • 0 Comments

வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்தும் வகையில் சீனா 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியினை இலங்கை;கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதன் கீழ் வறிய குடும்பங்களுக்கு 1,888 வீடுகளும் 108 வீடுகள் மூத்த கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளது அதற்கான ஒப்பந்தம் நேற்று (22) பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் கலாநிதி […]

உள்ளூர்

யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

  • November 23, 2024
  • 0 Comments

இந்த விபத்தில் உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.   சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். […]

உள்ளூர்

பெண் ஒருவரிடம் பாலியல் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது.

  • November 23, 2024
  • 0 Comments

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு , சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண்ணொருவர் தனது காதலனுடன் இருக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. படங்களை வைத்து பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அவரது வீட்டுக்கு சென்று தாம் கொழும்பில் இருந்து வந்துள்ள பொலிஸ் விசேட பிரிவினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு , பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவரது தொலைபேசி இலக்கங்களை பெற்று சென்றுள்ளனர். பின்னர் விசாரணைகளின் அடிப்படையில் , சட்ட […]