உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்த காலத்து தாதா மேர்வின் சில்வா மீண்டும் சிறைவாசம்

  • April 21, 2025
  • 0 Comments

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரும் இன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள […]

உள்ளூர்

அன்னை பூபதியின் நினைவு தினம் செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

  • April 18, 2025
  • 0 Comments

சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் அவர்களுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. நேற்று பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் இருவரினால் நாளை 19 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு காத்தான்குடி மற்றும் கொக்குவில் பொலிஸாரினால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கடிதமானது சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம் தனது […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் ரி 56 ரக துப்பாக்கி பொலிஸாரால் மீட்பு

  • April 16, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

உள்ளூர்

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை பயன்படுத்தி நேர்வேயில் நிதி சேகரிப்பு- அன்னை பூபதியின் மகள் முறைப்பாடு

  • April 15, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறும் கோரி 3 பேருக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் இன்று முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் குறித்த நினைவேந்தலை முன்னிட்டு மனித […]

உள்ளூர்

வரி தொடர்பில் அமெரிக்காவுடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையில் நடைபெறுகின்றது- தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

  • April 13, 2025
  • 0 Comments

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை குறித்து விரிவாக பேசப்பட்டது. பல யோசனைகளை முன்வைத்துள்ளனர். அவற்றை முழுமையாக பரசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 44 சதவீத பரஸ்பர தீர்வை வரி குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அமெரிக்காவின் வர்த்தக துறை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கஞ்சாவின் ஊசலாட்டம் உச்சம்,யாழ்ப்பாணத்தில் 12 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • April 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (8-04) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன. அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர். […]

உள்ளூர்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை

  • April 7, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றுஇடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மனு எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுக்கள் மீதான எதிர்ப்புகளை மே […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மேர்வின் சில்வாவுக்கு தொடரும் விளக்கமறியல்

  • April 3, 2025
  • 0 Comments

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் மனைவியும் மகளும் வேலைக்கு போனதால் குடும்பஸ்த்தர் தற்கொலை

  • April 2, 2025
  • 0 Comments

தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த 45 வயதுடைய ஐயாத்துரை புலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி மகளும் மனைவியும் வேலைக்கு செல்ல முற்பட்டவேளை குறித்த குடும்பஸ்தர் தனக்கு தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இந்நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் ஸம்மி சில்வா தெரிவு!

  • April 1, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் ஸம்மி சில்வா தெரிவு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவாகியுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 64ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் திங்கட்கிழமை (31) நடைபெற்றபோது அடுத்த இரண்டு வருடங்களுக்கு (2025 – 2027) அவர் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அவரது தெரிவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் குழு உறுதி செய்தது. அப் பதவிக்கு நான்காவது தடவையாக தெரிவாகியுள்ள ஷம்மி சில்வா, மூன்றாவது தடவையாக போட்டியின்றி […]