உள்ளூர்

முல்லைத்தீவு கிராம சேவையாளர் ஹரோயின் போதைப்பொருளுடன் கைது

  • March 29, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில் 2 கிராம் ஹரோயின் வைத்திருந்த குற்றசாட்டில் சந்தேக நபரான முன்னாள் கிராம சேவையாளர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியை சேர்ந்த 38 வயதான சந்தேக நபர் கிராம சேவையாளராக இருக்கும் போது, கடந்த சில மாதங்களுக்கு முன் போதைப்பொருளுக்கு அடிமையான குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது  

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞன் ஸ்தலத்தில் பலி மற்றொரு இளைஞன் படுகாயம்

  • March 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாமென யாழ். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

  • March 29, 2025
  • 0 Comments

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவானது அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது. எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அனுராதபுரம் பெண் வைத்தியரை வல்லுறவுக்கொண்ட சந்தேகநபரை வைத்தியர் இன்று அடையாளம் காட்டினார்

  • March 28, 2025
  • 0 Comments

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த 10 திகதி (10-03) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் அடையாள அணிவகுப்பின் போது பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். 34 வயதுடைய சந்தேக நபர் அடையாள அணிவகுப்புக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரால் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரை அடையாளம் காட்டுவதற்காக, பாலியல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வடக்கு மக்கள் ஜேவிபிக்கு ஆணை வழங்கியுள்ளனர் என கொக்கரிக்கும் அரசுக்கு உள்ளுராட்சி தேர்தலில் பதில் சொல்ல வேண்டும்- சுமந்திரன்

  • March 28, 2025
  • 0 Comments

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்றபோது கவனமாக உபயோகிக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (27-3) இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான மாணவ பட்டதாரிகளும் அரச வேலை கேட்டு போராட்டம்

  • March 26, 2025
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் இன்று கவனயீரப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவனயீரப்பு போராட்டமானது பேரணியாக யாழ் நகரிற்கு செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலும் திருநெல்வேலி சந்தியில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பொழுது ”இலவசக்கல்வியால் உருவான அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டதாரிகளையும் அரச தொழிலில் இணைப்பதற்கு நியாயமான வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கு, உள்ளக பயிற்ச்சியை உடனடியாக வழங்கு” எனும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இளம் யுவதி சடலம் மீட்பு வவுனியாவில் சம்பவம்

  • March 26, 2025
  • 0 Comments

வவுனியா கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியாஇ கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி க.கரிபிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். வவுனியா கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோழர்கள் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தல் களத்திற்கு வந்துள்ளதாக ரஜீவ்காந் குற்றச்சாட்டு

  • March 25, 2025
  • 0 Comments

பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன்மீண்டும் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் மகசின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்அரசியல்கைதிகள் சிலரை பார்த்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் கசிப்பு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்

  • March 24, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 26 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒருபோத்தல் கசிப்பு வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    

உள்ளூர்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவசரமாக அமெரிக்கா பயணமாகின்றார்

  • March 23, 2025
  • 0 Comments

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்கு செல்கின்றார். இந்த விஜயத்தின் போது, அமெரிக்க இராஜாங்க செயலர் மார்கோ ரூபியோ உள்ளிட்டவர்களை சந்தித்து பரஸ்பர கலந்துரையாடல்களில் அமைச்சர் விஜித ஹேரத் ஈடுப்பட உள்ளதுடன் அமெரிக்க வாழ் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார். ஜனாதிபதி டொனல்ட் டிரம்புடனான சந்திப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி […]